LOADING...
ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கும் முதல் இந்தியர் P.B. பாலாஜி
ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி P.B.பாலாஜி

ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கும் முதல் இந்தியர் P.B. பாலாஜி

எழுதியவர் Venkatalakshmi V
Aug 05, 2025
12:42 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக P.B.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இது, இந்த உயர் பதவியை ஏற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவருக்கு அளிக்கிறது. ஆகஸ்ட் 4 அன்று நடைபெற்ற JLR இயக்குநர்கள் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போதைய CEO அட்ரியன் மார்டெல், தனது ஒப்பந்த காலம் முடிந்தவுடன் ஓய்வு பெற உள்ளார். அவருக்கு பின் தலைமை பொறுப்பை ஏற்க வரும் பாலாஜி, நவம்பர் 2025-இல் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார். டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், மார்டெல் தனது பதவியிலிருந்து விலகும் வரை மாற்றத்தை சீராக நடத்தியே நடைபெற உதவுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கை

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் இது பற்றி கூறியதாவது

"JLR நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான தலைமை நாயகராக பாலாஜி நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியான நிகழ்வாகும். பல மாதங்களாக வாரியம் மிக கவனமாக நடத்திய தேடலில், அவர் மிகச் சிறந்த தேர்வாக இருப்பது உறுதி செய்யப்பட்டது". "பி.பி. பாலாஜி, நிறுவனம், அதன் உத்திகள், செயல் முறை ஆகியவற்றை நன்கு புரிந்தவர் என்பதோடு, JLR தலைமைக் குழுவுடன் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்." பி.பி. பாலாஜி, தற்போது டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக (CFO) 2017-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். 32 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட இவருக்கு, ஆட்டோமொட்டிவ் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறையில் நிதி மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை உள்ளிட்ட முக்கிய பங்களிப்புகள் உள்ளன.

தகவல் 

ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக P.B.பாலாஜி

"இந்த மகத்தான நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருப்பது பெருமையான விஷயம். கடந்த எட்டு ஆண்டுகளில், JLR மற்றும் அதன் பிராண்டுகளை அறிந்து நேசிக்க ஆரம்பித்துள்ளேன்". "இப்போது, JLR அணியுடன் இணைந்து அதன் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆவலாக உள்ளேன். அட்ரியனின் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."