Page Loader
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து கடன்களும் ரத்து; கேரள வங்கி அறிவிப்பு
வயநாடு நிலச்சரிவு

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து கடன்களும் ரத்து; கேரள வங்கி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 12, 2024
06:53 pm

செய்தி முன்னோட்டம்

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30 அன்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் முழு கடன்களையும் தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது. கடன்கள் தவிர அடமானம் வைக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களையும் திருப்பி ஒப்படைங்க வங்கி வாரியம் முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதன் சூரல்மாலா கிளையில் நிவாரணம் வழங்குவதற்காக கூடிய வங்கியின் இயக்குநர்கள் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. முன்னதாக ஜூலை 30ஆம் தேதி கேரள வங்கி மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்தை வழங்கியது. அதோடு, வங்கி ஊழியர்களும் தானாக முன்வந்து 5 நாள் சம்பளத்தை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

கேரள வங்கியின் அறிவிப்பு