LOADING...
ஐடிஆர் ஃபைலிங் செய்யும்போது உஷார்! வருமான வரி நோட்டீஸ் வரவழைக்கும் 5 பொதுவான தவறுகள்
வருமான வரி நோட்டீஸ் வரவழைக்கும் 5 பொதுவான தவறுகள்

ஐடிஆர் ஃபைலிங் செய்யும்போது உஷார்! வருமான வரி நோட்டீஸ் வரவழைக்கும் 5 பொதுவான தவறுகள்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 28, 2026
07:56 pm

செய்தி முன்னோட்டம்

நடப்பு 2026 நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கல் (ஐடிஆர்) தற்பொழுது நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் வரி செலுத்துவோர் மத்தியில் எப்போதும் இருக்கும் ஒரு மிகப்பெரிய அச்சம் வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வருவதுதான். பொதுவாக வருமானத்தில் ஏற்படும் முரண்பாடுகள், தவறான வரி விலக்குக் கோரிக்கைகள் அல்லது தாமதமான தாக்கல் போன்ற சாதாரண காரணங்களுக்காகவே இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்படுகின்றன. எனினும், ஐடிஆர் தாக்கல் செய்யும்போது சில எளிய வழிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றினால் தேவையற்ற நோட்டீஸ்கள் மற்றும் அபராதங்களில் இருந்து நாம் எளிதாகத் தப்பிக்கலாம்.

முதலீடுகள்

டிடிஎஸ் தொகை முரண்பாடு மற்றும் மனைவி பெயரில் செய்யும் முதலீடுகள்

வரி செலுத்துவோர் செய்யும் முதன்மைத் தவறு டிடிஎஸ் தொகையில் ஏற்படும் முரண்பாடாகும். உங்களது நிறுவனம் டிடிஎஸ் ரிட்டர்ன்களைத் தாக்கல் செய்வதில் தாமதம் செய்தாலோ அல்லது தவறு செய்தாலோ உங்களுக்கு வரி வரவு கிடைக்காமல் நோட்டீஸ் வரலாம். இதனை சரிசெய்ய நிறுவனத்திடம் பேசி டிடிஎஸ் தொகையைத் திருத்த வேண்டும். அதேபோல, பலரும் தங்களது மனைவி அல்லது குழந்தைகளின் பெயரில் நிலம், ஃபிக்சட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார்கள். இந்த முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் உங்களுடைய வருமானமாகவே கருதப்பட்டு வரி விதிக்கப்படும் என்பதால், ஐடிஆர் படிவத்தில் இதனைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

பரிவர்த்தனை மதிப்பு

உயர் மதிப்புப் பரிவர்த்தனைகள் மற்றும் ஐடிஆர் தாக்கல் செய்யத் தவறுதல்

வருமான வரித் தாக்கலின் போது ஏதேனும் ஒரு வருமானத்தைக் குறிப்பிட மறப்பது அல்லது தவறான பிரிவின் கீழ் வரி விலக்குக் கோருவது போன்ற முரண்பாடுகள் இருந்தால் வரித்துறை உடனடியாக நோட்டீஸ் அனுப்பும். குறிப்பாக, நீங்கள் பெரிய தொகையிலான உயர் மதிப்புப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, அதற்குரிய வரியைச் சரியாக செலுத்தி வரித்துறைக்குத் தெரியப்படுத்துவது அவசியமாகும். ஒருவேளை நீங்கள் வருமான வரித் தாக்கல் செய்யத் தவறினால், முந்தைய 6 மதிப்பீட்டு ஆண்டுகள் வரையிலான கணக்குகளைக் கேட்டு உங்களுக்கு நினைவூட்டல் நோட்டீஸ் வரும். மேலும், தாமதமாகத் தாக்கல் செய்யும்போது செலுத்தப்படாத வரித் தொகைக்கு மாதத்திற்கு 1% வட்டி அபராதமாக விதிக்கப்படும்.

Advertisement