என் கருத்தில் மாற்றமில்லை: 6 நாள் வேலைக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி மீண்டும் ஆதரவு
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என் நாராயண மூர்த்தி, தனது வாரத்தில் ஆறு நாள் வேலை கண்ணோட்டத்தில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார். அவரின் கருத்திற்கு சமூக ஊடக எதிர்ப்பை உருவாக்கியது குறித்தும் பேசிய நாராயணமூர்த்தி, நாட்டின் முன்னேற்றம், கடின உழைப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் தங்கியுள்ளது என்றார். நாராயணமூர்த்தி, CNBC குளோபல் லீடர்ஷிப் உச்சிமாநாட்டில், "இதை(6 நாள் வேலை கருத்தை) என்னுடன் என் கல்லறைக்கு எடுத்துச் செல்வேன்" எனவும் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிபடுத்தினார். நாராயண மூர்த்தி, 1986ல் ஆறு நாள் வேலை வாரத்தில் இருந்து ஐந்து நாட்களுக்கு இந்தியா மாறியது குறித்தும் ஏமாற்றத்தை அந்த மாநாட்டில் வெளிப்படுத்தினார். இந்த மாற்றத்தை தான் ஒருபோதும் ஏற்கவில்லை என்று அவர் கூறினார்.
Twitter Post
அயராத உழைப்பிற்கு முன்மாதிரியாக பிரதமரை சுட்டிக்காட்டிய நாராயணமூர்த்தி
அயராத அர்ப்பணிப்பின் முன்மாதிரியாக பிரதமர் நரேந்திர மோடியை சுட்டிக்காட்டிய நாராயணமூர்த்தி, தேசிய முன்னேற்றத்தை அடைய கடினமாக உழைக்க வேண்டியது அவசியம் என்று பரிந்துரைத்தார். "கடின உழைப்புக்கு மாற்று இல்லை," என்று அவர் கூறினார், வேலை-வாழ்க்கை சமநிலை குறித்த தனது நிலைப்படையும் அவர் தெளிவாக்கினார்.
நாராயண மூர்த்தியின் Work - Life பாலன்ஸ் கொள்கை
நாராயண மூர்த்தி தனது சொந்த வாழ்க்கையில் இருந்து நுண்ணறிவைப் பகிர்ந்துகொண்டார். அவர் தனது வாழ்க்கை முழுவதும் நீண்ட மணிநேரம் பணியாற்றியதாக கூறினார். அவர் இன்போசிஸ் நிறுவனத்தை முன்னேற்றுவதற்காக ஒரு நாளைக்கு 14 மணிநேரம், வாரத்தில் ஆறரை நாட்கள், தனது தொழில்முறை கடமைகளில் செலவழித்தார். அவரது தினசரி, காலை 6:30 மணிக்கு அலுவலகத்தில் தொடங்கி இரவு 8:40 மணியளவில் மட்டுமே புறப்படுவதை வழக்ககமாக கொண்டிருந்ததாகவும் பெருமிதத்துடன் கூறினார். அவரைப் பொறுத்தவரை, கடின உழைப்பு என்பது தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல; இந்தியாவில் பெரும்பாலும் மானியத்துடன் கூடிய கல்வியைப் பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு இது ஒரு பொறுப்பு என்கிறார். அவர், வேலைக்கான அர்ப்பணிப்பு, இந்திய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் மற்றும் வாய்ப்புகள் உள்ளவர்களுக்கு ஒரு கடமை எனவும் கூறினார்.
"இரண்டாம் உலக போருக்கு பின்னர் உலக நாடுகள் முன்னேறியதற்கு கடின உழைப்பே காரணம்"
ஒரு நபரின் புத்திசாலித்தனம் அல்லது திறமையைப் பொருட்படுத்தாமல் கடின உழைப்பு அவசியம் என்று குறிப்பிட்டார். "இந்த நாட்டில், நாம் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருந்தாலும் கடின உழைப்புக்கு ஈடு இணையில்லை,'' என்றார். மூர்த்தியின் நிலைப்பாடு பெரும்பாலும் ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் இணையாக உள்ளது. இவை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் தங்கள் பொருளாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்பியதாக அவர் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, இந்த நாடுகள், கவனம் செலுத்தும் மற்றும் உறுதியான பணியாளர்களுடன் ஒரு தேசம் எதைச் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக அமைகின்றன. இளம் இந்தியர்களுக்கு இதேபோன்ற பொறுப்பு இருப்பதாக மூர்த்தி நம்புகிறார்.