Page Loader
டிக்கெட்டுகளுக்கான எரிபொருள் கட்டணத்தை குறைப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு; காரணம் என்ன?
டிக்கெட்டுகளுக்கான எரிபொருள் கட்டணத்தை குறைப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

டிக்கெட்டுகளுக்கான எரிபொருள் கட்டணத்தை குறைப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு; காரணம் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 04, 2024
03:04 pm

செய்தி முன்னோட்டம்

விமான எரிபொருளின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச விதிகளின்படி பயணிகளிடமிருந்து விமான டிக்கெட்டுகளில் எரிபொருள் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தியுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில், விமான விசையாழி எரிபொருள் (ஏடிஎஃப்) விலைகள் அதிகரித்த பிறகு, இண்டிகோ விமான நிறுவனம் இந்த கட்டணத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், இன்று, "ஏடிஎஃப் விலை சமீபத்தில் குறைக்கப்பட்டதால், இண்டிகோ (எரிபொருள்) கட்டணத்தை திரும்பப் பெறுகிறது" என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் விலைகள் ஒரு விமான நிறுவனத்தின் இயக்கச் செலவில் சுமார் 40% ஆகும். இதனால், தற்போது இண்டிகோ விமானத்தின் டிக்கெட் விலைகள் பெருமளவில் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

இண்டிகோ விமான கட்டணம் குறைக்கப்படவிருக்கிறது

card 2

இன்று முதல் அமலுக்கு வரும் கட்டணக்குறைப்பு 

எரிபொருள் கட்டணத்தை நீக்குவதற்கான முடிவு ஜனவரி 4, வியாழன் முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் கட்டணம் இலக்குக்கான தூரத்தைப் பொறுத்து ₹ 300 முதல் ₹ 3,500 வரை இருந்தது. அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் திங்கள்கிழமை டெல்லியில் ஜெட் எரிபொருளின் விலையில் ஒரு கிலோலிட்டருக்கு ₹ 4,162.5 அல்லது 3.9% குறைத்து, ₹ 101,993.17 ஆக அறிவித்ததைத் தொடர்ந்து, இண்டிகோ நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் இண்டிகோ விமான டிக்கெட்டுகளின் விலை, ரூ.300 முதல் ரூ.1000 குறையக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.