Loading...
விமான பயணிகளுக்கு அதிர்ச்சி! கட்டணங்களை உயர்த்திய இண்டிகோ; அக்டோபர் 6 முதல் புதிய விதிகள்
அக்டோபர் 6 முதல் இண்டிகோ விமானக் கட்டணம் உயர்வு

விமான பயணிகளுக்கு அதிர்ச்சி! கட்டணங்களை உயர்த்திய இண்டிகோ; அக்டோபர் 6 முதல் புதிய விதிகள்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 05, 2026
06:35 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ, தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் கட்டணத்தை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விமான எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6, 2026 முதல் செய்யப்படும் அனைத்து புதிய விமான முன்பதிவுகளுக்கும் இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

காரணம்

விமான எரிபொருள் விலை உயர்வுக்கான காரணம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சீரற்ற முறையில் மாறுபட்டு வருகிறது.

மேலும் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு தீர்வு கிடைக்காததால், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் விமான எரிபொருள் விலை 14 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இது கடந்த பத்தாண்டுகளில் பதிவான மிக அதிகபட்ச விலைகளில் ஒன்றாகும்.

விமான நிறுவனங்களின் இயக்க செலவில் பெரும்பகுதியை எரிபொருளே அடைப்பதால், இந்த விலை உயர்வு நிறுவனத்தின் நிதி அமைப்பை பாதித்துள்ளதாக இண்டிகோ விளக்கியுள்ளது.

கூடுதல் கட்டணங்கள்

உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான புதிய கூடுதல் கட்டணங்கள்

உள்நாட்டு வழித்தடங்களில் 500 கிமீ வரையிலான பயணங்களுக்கு ரூ.375 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.

501 முதல் 1,000 கிமீ வரையிலான பயணங்களுக்கு ரூ.600 மற்றும் 1,001 முதல் 1,500 கிமீ பயணங்களுக்கு ரூ.900 விதிக்கப்படும்.

மேலும் 1,501 முதல் 2,000 கிமீ தூரத்திற்கு ரூ.1,150 கட்டணமும், 2,000 கிமீக்கு அதிகமான தூரம் கொண்ட நீண்ட தூரப் பயணங்களுக்கு ரூ.1,300 கூடுதல் எரிபொருள் கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

கட்டண விவரங்கள்

சர்வதேச வழித்தடங்களுக்கான கட்டண விவரங்கள்

தெற்காசிய சார்க் பிராந்திய பயணங்களில் 500 கிமீ வரை ரூ.1,000 மற்றும் அதற்கு மேல் ரூ.3,000 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கான பயணங்களுக்கு ரூ.5,500 கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.

ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விமானப் பயணங்களுக்கு ரூ.6,000 எரிபொருள் கட்டணம் வசூலிக்கப்படும்.

பயணிகள் மீதான சுமையை குறைக்கவே இந்த அளவிலான மிதமான கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ கூறியுள்ளது.

ADVERTISEMENT