NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / 2024 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.4% ஆக குறைவு; இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    2024 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.4% ஆக குறைவு; இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி
    2024 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.4% ஆக குறைவு

    2024 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.4% ஆக குறைவு; இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 29, 2024
    06:16 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி நிதியாண்டு 2024-25 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 5.4% ஆக குறைந்தது. இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைவாகும்.

    இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 8.1% ஆக இருந்தது என்று தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (என்எஸ்ஓ) தரவுகள் தெரிவிக்கின்றன.

    இருந்தபோதிலும், அதே காலாண்டில் சீனாவின் 4.6% வளர்ச்சியை விஞ்சி, வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை இந்தியா தக்க வைத்துக் கொண்டது.

    இதற்கிடையே துறைசார் செயல்திறன் மாறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தியது. விவசாய ஜிவிஏ 3.5% ஆக உயர்ந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1.7% ஆக இருந்தது.

    வீழ்ச்சி

    உற்பத்தித் துறை வீழ்ச்சி

    அதே சமயம், உற்பத்தித் துறையின் ஜிவிஏ வளர்ச்சியானது 2.2% ஆக சரிந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 14.3% இல் இருந்து குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது.

    இது உலகப் பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் இந்தத் துறை எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுகிறது.

    நிதியாண்டு 2024 இன் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பர்), ஜிடிபி வளர்ச்சி சராசரியாக 6% ஆக இருந்தது.

    முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் 8.2% ஆக இருந்தது. ஏப்ரல்-ஜூன் காலாண்டு வளர்ச்சி மதிப்பீடு 6.7% ஆக நிலையானதாக இருந்தது.

    இரண்டாம் காலாண்டின் மந்தநிலை பொருளாதார வேகம் பற்றிய கவலைகளை எழுப்புகிறது.

    குறிப்பாக உலகளாவிய தலையீடுகள் மற்றும் மந்தமான உற்பத்தி மீட்பு ஆகியவற்றால் இது ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பொருளாதாரம்
    நிதித்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியா

    அதானிக்கு எதிரான வழக்கில் அமெரிக்கா உறுதி: இந்தியாவுடனான உறவில் விரிசல் இல்லை எனவும் உத்தரவாதம் அதானி
    நேசக்கரம் நீட்டுகிறதா கனடா? இந்தியாவிற்கு விமானத்தில் வருபவர்களுக்கான ஸ்க்ரீனிங் முறையை தளர்த்தியது கனடா
    இந்தியா-பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர்கள் இடையே டிசம்பரில் பேச்சுவார்த்தை; ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரிக்கை? பங்களாதேஷ்
    CRF 100 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை திரும்பப் பெறுகிறது ஹோண்டா; காரணம் என்ன? ஹோண்டா

    பொருளாதாரம்

    பெண் தொழிலாளர்கள் பற்றிய புரிதலை மேம்படுத்திய அமெரிக்க அறிஞருக்கு  பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன்
    உயரும் தங்க விலை.. தற்போதைய நிலையில் தங்கம் வாங்கலாமா? கூடாதா? தங்கம் வெள்ளி விலை
    இலங்கை- சீனா 4.2 பில்லியன் டாலர் கடனை மறுவரையறை செய்ய ஒப்புதல் இலங்கை
    இந்தியா மற்றும் இலங்கையில் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அக்சென்சர் இந்தியா

    நிதித்துறை

    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை  ஒடிசா
    நவம்பர் 1 (நாளை) முதல் அமலாகவிருக்கும் நிதி சார்ந்த மாற்றங்கள்! இந்தியா
    கடந்த நிதியாண்டில் வைப்பு நிதிக்கான வட்டியை வழங்கத் தொடங்கிய EPFO அமைப்பு.. சரிபார்ப்பது எப்படி? வட்டி விகிதம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025