ஒரேயடியாக 11 விமான நிலையங்கள் தனியார் மயம்? டிசம்பர் மாத ஏலத்திற்கு முன் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க ரோடு ஷோ
செய்தி முன்னோட்டம்
இந்திய விமான நிலைய உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, 11 விமான நிலையங்களை தொகுப்புகளாக சேர்த்து தனியார்மயமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஏலத்திற்கு முன்னதாக, சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் துபாய், சிங்கப்பூர் மற்றும் மும்பை ஆகிய முக்கிய நகரங்களில் உலகளாவிய ரோடுஷோக்கள் நடத்தப்படவுள்ளன. இந்திய விமான வரலாற்றில் முதன்முறையாக விமான நிலையங்கள் தனித்தனியாக அல்லாமல், பிராந்தியத் தொகுப்புகளாக ஏலத்திற்கு விடப்படுகின்றன.
பட்டியல்
தொகுப்பு வாரியான விமான நிலையப் பட்டியல்
வாரணாசி: கயா மற்றும் குஷிநகர் விமான நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ்: காங்ரா விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்: ஹூப்பள்ளி விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ராய்ப்பூர்: அவுரங்காபாத் விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
திருச்சி: திருப்பதி விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஏல விதிகள்
உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் ஏல விதிகள்
மேற்கு ஆசியாவைச் சேர்ந்த இறையாண்மை செல்வ நிதிகள், உலகளாவிய விமான நிலைய இயக்குநர்கள் மற்றும் JSW குழுமம் போன்ற முன்னணி இந்தியத் தொழில் நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கக் குறிவைக்கப்பட்டுள்ளன.
சந்தையில் ஒரே நிறுவனம் அனைத்து விமான நிலையங்களையும் கைப்பற்றி ஏகபோகம் செய்வதைத் தவிர்க்க, ஒரு நிறுவனம் வெல்லக்கூடிய விமான நிலையங்களின் எண்ணிக்கைக்கு அரசு உச்சவரம்பு நிர்ணயிக்கவுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஏல நடவடிக்கைகள் மூலம் விமான நிலையங்களின் சேவைகளும், பயணிகள் வசதிகளும் பன்மடங்கு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.