Loading...
EPF கணக்கில் உள்ள தவறுகளை திருத்துவது எப்படி? 5 எளிய வழிகள்
'ஜாயிண்ட் டிக்ளரேஷன்' வசதியை இணைய வழியில் பயன்படுத்திக் கொள்ளலாம் என EPFO தெரிவித்துள்ளது

EPF கணக்கில் உள்ள தவறுகளை திருத்துவது எப்படி? 5 எளிய வழிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 10, 2026
05:49 pm

செய்தி முன்னோட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்களில் சிறிய தவறு அல்லது முரண்பாடுகள் இருந்தாலும், PF பணத்தை திரும்பப் பெறுவது, கணக்கை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது அல்லது க்ளைம்களை முடிப்பது போன்றவற்றில் தாமதம் ஏற்படலாம். இப்பிரச்சனைக்கு தீர்வாக, உறுப்பினர்கள் தங்களது விவரங்களை எளிதாக மாற்றியமைக்க 'ஜாயிண்ட் டிக்ளரேஷன்' வசதியை இணைய வழியில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டெப்

EPFO Member Portal மூலம் விவரங்களைத் திருத்த 5 எளிய படிகள்:

உறுப்பினர்கள் தங்களது கணக்கில் உள்ள தவறான விவரங்களை ஆன்லைனில் திருத்துவதற்கு பின்வரும் 5 படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.

EPFO-வின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களுக்கான இணையதள பக்கத்திற்குச் சென்று, உங்களது UAN எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையவும்.

லாக்-இன் செய்த பிறகு, மெனுவில் உள்ள 'Joint Declaration' என்ற புதிய ஆன்லைன் வசதியைக் கண்டறிந்து கிளிக் செய்யவும்.

தனிப்பட்ட விவரங்களில் நீங்கள் திருத்த விரும்பும் தகவலைத் தேர்வு செய்து, அதற்குரிய சரியான விவரங்களை உள்ளிடவும்.

திருத்தப்படும் தகவல்களுக்கு ஆதாரமாக ஆதா ர் கார்டு, பான் கார்டு, பிறப்புச் சான்றிதழ் அல்லது அரசு வழங்கிய உரிய சான்றுகளை பதிவேற்ற வேண்டும்.

நீங்கள் உள்ளீடு செய்த விவரங்கள் மற்றும் பதிவேற்றிய ஆவணங்களை சரிபார்த்து 'Submit' செய்யவும்.

சரிபார்ப்பு

சரிபார்ப்பு நடைமுறை

மனு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, EPFO விதிகள் மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளின்படி கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு விரைவிலேயே இ.பி.எஃப் கணக்கில் விவரங்கள் புதுப்பிக்கப்படும்.

எனவே பி.எஃப் பணப் பரிவர்த்தனைகளில் எந்த தடங்கலும் ஏற்படாமல் இருக்க உறுப்பினர்கள் உடனடியாக தங்களது இ.பி.எஃப் கணக்கில் உள்ள விவரங்களை சரிபார்த்துப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT