தமிழகத்தில் கொரில்லா கிளாஸ் தயாரிக்க ஒப்பந்தமிட்டுள்ளது கார்னிங் நிறுவனம்
கொரில்லா கிளாஸ் உற்பத்தியாளர் கார்னிங், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டிமஸ் இன்ஃப்ராகாமுடன் இணைந்து, பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜிகளை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளது. இந்த கூட்டு முயற்சியில் ரூ. 1,000 கோடியில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இந்நிறுவனத்தார் ஒப்படைத்தனர். மொபைல் போன்களுக்கான முன் உறை கண்ணாடி தயாரிப்பதில், இந்த புதிய நிறுவனம் கவனம் செலுத்தும். கார்னிங்கின் கவர் கண்ணாடிகள், கீறல்கள் மற்றும் உடைப்புகளுக்கு எதிராக போன்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும் கொரில்லா கிளாஸ் தயாரிப்புகளுக்கு புகழ் பெற்றவை. இந்த கார்னிங் நிறுவனமானது, பட்ஜெட் பிரிவு முதல் உயர்தரமான ஸ்மார்ட்போன்களுக்கான, குறிப்பாக Apple, Samsung, OnePlus மற்றும் பிற முன்னணி பிராண்டுகளுக்கு இதன் தயாரிப்புகளை வழங்குகிறது.