
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு: சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்த மாத தொடக்கம் முதலே தங்கம் விலை அதிக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) அன்று தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் உயரத்தொடங்கியது.
நேற்று சற்றே குறைந்திருந்த தங்க விலை இன்று மீண்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது.
முன்னதாக ஒரு கிராமுக்கு ரூ.10,000 ஐ நெருங்கி வந்த தங்கத்தின் விலை சிறிய சரிவிற்கு பின்னர், இப்போது மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது.
கடந்த வாரம் தொடர்ந்து நான்கு நாட்கள் நிலைத்தன்மையுடன் இருந்ததைத் தொடர்ந்து, நேற்று விலைகள் கூர்மையான சரிவைக் கண்டன.
மக்கள் சற்றே நிம்மதியடைந்த நிலையில், நாளை அட்சய திருதியை என்பதால் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.71,840க்கும் கிராம் ரூ.8,980க்கும் விற்பனையாகிறது!#SunNews | #GoldRate | #Chennai pic.twitter.com/emuT20SQPC
— Sun News (@sunnewstamil) April 29, 2025
சவரன்
ஒரு சவரன் தங்க விலை
22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து, தற்போது ஒரு கிராமுக்கு ரூ.8980 ஆகவும், சவரனுக்கு ரூ.71840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, தற்போது ஒரு கிராமுக்கு ரூ.7,435 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.59,480 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை மாற்றமின்றி அதே விலையில் விற்கப்படுகிறது. ஒரு கிராம் இப்போது ரூ.111 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,11,000 ஆகவும் உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சரிவு, குறிப்பாக திருமண சீசன்கள் மற்றும் பண்டிகைகள் நெருங்கி வருவதால், விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் வாங்குவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.