நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு குட் நியூஸ்; தங்கம் விலை மீண்டும் ₹2640 சரிவு; இன்றைய நிலவரம்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (மார்ச் 21) மீண்டும் குறைந்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹330 குறைந்து ₹13,620 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,640 குறைந்து ₹1,08,960 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹360 குறைந்து ₹14,858 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,880 குறைந்து ₹118,864 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் சரிவு
18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹280 குறைந்து ₹11,360 ஆகவும், ஒரு சவரன் ₹2,240 குறைந்து ₹90,880 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே சனிக்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 குறைந்து ₹250.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,50,000 ஆகவும் விற்பனை ஆகிறது. ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போருக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்து வரும் நிலையில், தங்கம் வெள்ளி விலையும் குறைவது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.