தங்கம் விலை மேலும் ₹3,200 சரிவு; ஒரே நாளில் சவரன் ₹5360 குறைவு
செய்தி முன்னோட்டம்
வியாழக்கிழமை (மார்ச் 19), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை காலையில் ஒரு கிராம் ₹270 குறைந்த நிலையில், மாலையில் ₹400 குறைந்து ₹13,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் காலையில் ₹2,160 குறைந்த நிலையில், மாலையில் ₹3200 குறைந்து ₹1,11,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் காலையில் ₹294 குறைந்த நிலையில், மாலையில் ₹437 குறைந்து ₹15,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் காலையில் ₹2,352 குறைந்த நிலையில், மாலையில் ₹3,496 குறைந்து ₹1,21,304 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, மாலையில் ஒரு கிராம் ₹395 குறைந்து ₹11,585 ஆகவும், ஒரு சவரன் ₹3,160 குறைந்து ₹92,680 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே, வியாழக்கிழமை மாலையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை காலையில் ஒரு கிராம் ₹10 குறைந்த நிலையில், மாலையில் விலை குறைப்பு இல்லாமல் ₹265.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,65,000 ஆகவும் விற்பனை ஆகிறது. மத்திய கிழக்கு போரால் பங்குச் சந்தைகள் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், தங்கம் வெள்ளி விலையும் குறைந்து வருவது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360 குறைந்தது!#SunNews | #GoldPrice | #GoldRate pic.twitter.com/bfYglJA3Wz
— Sun News (@sunnewstamil) March 19, 2026