இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 25
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,880-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.47,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.6415-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் வலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.51,320-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.80.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.