Loading...
11 மாதங்கள் கழித்து 1 லட்சத்திற்கும் கீழாக குறைந்தது தங்கத்தின் விலை
1 லட்சத்திற்கும் கீழாக குறைந்தது தங்கத்தின் விலை

11 மாதங்கள் கழித்து 1 லட்சத்திற்கும் கீழாக குறைந்தது தங்கத்தின் விலை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 17, 2026
12:14 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. அதன்படி, செவ்வாய்கிழமை (நவம்பர் 17), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹70 குறைந்து ₹12,470 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹560 குறைந்து ₹99,760 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹76 குறைந்து ₹13,604 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹608 குறைந்து ₹1,08,832 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது.

அதன்படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹55 குறைந்து ₹10,205 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹440 குறைந்து ₹81,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே செவ்வாய்கிழமை வெள்ளி விலையில் மாற்றமில்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹190.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹1,90,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT