தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை தாறுமாறு சரிவு; இன்றைய நிலவரம்
செய்தி முன்னோட்டம்
இந்த வார தொடக்கத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை, கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை (நவம்பர் 13), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹120 குறைந்து ₹12,695 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹960 குறைந்து ₹1,01,560 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹131 குறைந்து ₹13,849 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,048 குறைந்து ₹1,10,792 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது.
அதன்படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹100 குறைந்து ₹10,390 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹800 குறைந்து ₹83,120 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹195.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹1,95,000 ஆக விற்கப்படுகிறது.