Page Loader
ஆபரண தங்கத்தின் விலை 200 ரூபாய் சரிந்தது

ஆபரண தங்கத்தின் விலை 200 ரூபாய் சரிந்தது

எழுதியவர் Sindhuja SM
May 13, 2024
12:29 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,725க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.200 குறைந்து ரூ.53,800ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,336ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,688ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ0.50 குறைந்து ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தங்கம் வெள்ளி விலை நிலவரம்