Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 12

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 12

எழுதியவர் Sindhuja SM
May 12, 2024
12:49 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.6,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.54,000ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,364ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,912ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்று ரூ.90.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை

கடந்த ஒரு வாரத்தில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றங்கள்

கடந்த ஞாயிற்றுகிழமை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,600ஆக விற்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 150 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த வாரம், ரூ.52,800க்கு விற்கபட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது ரூ.1200 உயர்ந்து ரூ.54,000க்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கு முன், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 164 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த வாரம், ரூ.57,600க்கு விற்பட்ட ஒரு சவரன் சுத்த தங்கத்தின் விலை, தற்போது ரூ.1312 உயர்ந்து ரூ.58,912க்கு விற்கப்பட்டு வருகிறது.