Page Loader
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு 

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு 

எழுதியவர் Sindhuja SM
Feb 14, 2024
11:08 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.5,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரன் ஒன்று ரூ.46,000-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,273ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,184ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.75.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தங்கம் வெள்ளி விலை நிலவரம்