Page Loader
லிங்க் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி
லிங்க் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி

லிங்க் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 14, 2023
12:35 pm

செய்தி முன்னோட்டம்

லிங்க் லாஜிஸ்டிக்ஸ் (LYNK Logistics) என்ற விநியோக வணிக நிறுவனத்தை கையகப்படுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது இந்திய உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி. கடந்த சில ஆண்டுகளாக தங்களது செயல்பாடுகளின் மூலம், உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் சில்லறை விற்பனைச் சந்தையில், FMCG (Fast Moving Consumer Goods) பொருட்களின் விநியோகச் சங்கிலியில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது லிங்க் லாஜிஸ்டிக்ஸ். 2015-ம் ஆண்டு அபினவ் ராஜா மற்றும் ஷேகர் பெண்டே ஆகிய இருவரால் நிறுவப்பட்ட நிறுவனம் லிங்க் லாஜிஸ்டிக்ஸ். இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட முக்கியமான எட்டு நகரங்களில். முக்கிய நிறுவனங்களின் FMCG பொருட்களின் விநியோக வணிகத்தை மேற்கொண்டு வருகிறது இந்நிறுவனம்.

வணிகம்

வளரும் மளிகை பொருட்கள் சில்லறை விற்பனைச் சந்தை: 

உலகளவில் பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் 'உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் சில்லறை விற்பனைச் சந்தை'யைக் கொண்டிருக்கிறது இந்தியா. இந்தியாவின் மளிகை பொருட்கள் சில்லறை விற்பனைச் சந்தையானது 570 பில்லியன் டாலர்கள் மதிப்பைக் கொண்டிருக்கும் எனக் கணக்கிடப்படுகிறது. மேலும், ஆண்டுக்கு 8% என்ற அளவில் வளர்ச்சியும் அடைந்து வருகிறது இந்திய மளிகை பொருட்கள் சில்லறை விற்பனைச் சந்தை. இந்த கையகப்படுத்தலுக்குப் பின்பு, லிங்க் நிறுவனம் அதன் தற்போதைய சிஇஓ-வான ஷேகர் பெண்டே தலைமையில் தனித்தே இயங்கும் எனத் தெரிவித்திருக்கிறது ஸ்விக்கி. தொழில்நுட்ப ரீதியில் லிங்க்கின் செயல்பாடுகளை மேம்படுத்தத் தாங்கள் உதவவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது ஸ்விக்கி.