Loading...
ஸ்டார்லிங்க் சேவையைத் தடுக்கும் முன்னணி நிறுவனங்கள்? கொதித்த எலான் மஸ்க்
சந்தை மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ளவே சில முன்னணி நிறுவனங்கள் ஸ்டார்லிங்க் சேவையைத் தடுப்பதாக மஸ்க் சாடியுள்ளார்

ஸ்டார்லிங்க் சேவையைத் தடுக்கும் முன்னணி நிறுவனங்கள்? கொதித்த எலான் மஸ்க்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 08, 2026
09:32 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தனது 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் தொலைத்தொடர்பு சந்தையைக் கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட "ஒலிகோர்க்குகள்" (Oligarchs) தான் இதற்குக் காரணம் என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். தனது சந்தை மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ளவே சில முன்னணி நிறுவனங்கள் ஸ்டார்லிங்க் சேவையைத் தடுப்பதாக எலான் மஸ்க் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"துரதிர்ஷ்டவசமாக, இந்திய மக்கள் மீது தங்களின் ஏகபோகக் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்வதற்காகச் சில ஒலிகோர்க்குகளால் நாங்கள் தடுக்கப்படுகிறோம். அவர்கள் யார் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்... இது இந்திய மக்களுக்கு எதிரான சதியாகும்!" என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

இணைய இடைவெளி

கிராமப்புற இணைய இடைவெளி

சமீபத்திய தரவுகளின்படி, மே 2026 நிலவரப்படி இந்தியாவில் இன்னும் 11,256 கிராமங்களில் 4ஜி இணைய வசதி கிடைக்கவில்லை.

நகர்ப்புறங்களில் 100 பேருக்கு 126.80 இணைய இணைப்புகள் உள்ள நிலையில், கிராமப்புறங்களில் இது 48.31 ஆக மட்டுமே உள்ளது.

இத்தகைய தொலைதூரக் கிராமங்களுக்கு குறைந்த செலவில் அதிவேக இணையம் வழங்க ஸ்டார்லிங்க் தயாராக இருப்பதாக எலான் மஸ்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா மொபைல் காங்கிரஸ் 2026 நிகழ்வில் பேசிய ஸ்டார்லிங்க் பிசினஸ் ஆபரேஷன்ஸ் துணைத் தலைவர் லாரன் டிரேயர், இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கேற்ப தரவுகளை நாட்டிற்குள்ளேயே சேமிக்கும் வசதிகளையும், 20 கேட்வே தளங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆண்டெனாக்களையும் அமைத்துச் சேவை வழங்க முழுமையாகத் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT