Loading...
நவம்பர் 30 கடைசி நாள்: ஓய்வூதியதாரர்கள் கட்டாயம் சரிபார்க்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்
ஓய்வூதியதாரர்கள் கட்டாயம் சரிபார்க்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

நவம்பர் 30 கடைசி நாள்: ஓய்வூதியதாரர்கள் கட்டாயம் சரிபார்க்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 27, 2026
06:48 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியத்தை தடையின்றி தொடர்ந்து பெறுவதற்கு வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலக்கெடுவிற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் நவம்பர் 30-க்குள் சான்றிதழை சமர்ப்பிக்கத் தவறினால் டிசம்பர் மாதம் முதல் மாதாந்திர ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். எனவே கடைசி நேர சிக்கல்களைத் தவிர்க்க ஓய்வூதியதாரர்களும் அவர்களது குடும்பத்தினரும் கட்டாயம் சரிபார்க்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆவணங்களை சரிபார்த்தல்

ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் ஓய்வூதிய ஆவணங்களை சரிபார்த்தல்

முதலாவதாக ஓய்வூதியதாரரின் செயலில் உள்ள மொபைல் எண் ஆதார் மற்றும் ஓய்வூதிய வங்கிக் கணக்குடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

சில நேரங்களில் மூத்த குடிமக்கள் மொபைல் எண்ணை மாற்றிவிட்டு வங்கியில் புதுப்பிக்க மறந்துவிடுவதால் ஓடிபி மற்றும் ஓய்வூதிய வரவு குறுஞ்செய்திகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இரண்டாவதாக ஆதார் எண் பிபிஓ எண் வங்கிக் கணக்கு எண் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் நிறுவனத்தின் பெயர் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

விதிவிலக்கு

மறுமணம் மற்றும் மறுவேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கான முக்கிய விதிவிலக்கு

மூன்றாவதாக அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஜீவன் பிரமாண் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஓய்வு பெற்ற பிறகு மறுமணம் செய்து கொண்டவர்கள் மற்றும் மீண்டும் பணியில் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் சான்றிதழ் வசதியைப் பயன்படுத்த அனுமதி இல்லை.

இவர்கள் நேரடியாகத் தங்கள் ஓய்வூதியம் வழங்கும் வங்கிக் கிளை அல்லது அலுவலகத்திற்கு சென்று காகித வடிவிலான வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

வங்கி நாமினி சரிபார்ப்பு

வீட்டிலிருந்தே சமர்ப்பிக்கும் வழிகள், பிரமாண் ஐடி மற்றும் வங்கி நாமினி சரிபார்ப்பு

நான்காவதாக ஸ்மார்ட்போன் மூலம் ஆதார் முக அங்கீகார செயலி அல்லது உமாங் செயலி வழியாக வீட்டிலிருந்தே சான்றிதழை சமர்ப்பிக்கலாம் அல்லது நடக்க முடியாதவர்கள் தபால்காரர் மற்றும் வங்கியின் வீட்டு வாசல் சேவையைப் பயன்படுத்தலாம்.

சான்றிதழ் சமர்ப்பித்தவுடன் எஸ்எம்எஸ் மூலம் வரும் பிரமாண் ஐடியை பாதுகாப்பாக சேமித்து சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஐந்தாவதாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஓய்வூதியதாரரின் வங்கிக் கணக்கு நாமினி விவரங்கள் மருத்துவக் காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் அவசரகால நிதி ஆகியவை முறையாக உள்ளதா என்பதையும் குடும்பத்தினர் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT