நுகர்வோர் ஒருவருக்கு ITC நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு, ஏன்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பல்வேறு நுகர்வோர் பயன்பாட்டுத் தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வரும் வணிக நிறுவனமான ITC (ஐடிசி), நுகர்வோர் ஒருவருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது நுகர்வோர் நீதிமன்றம், ஏன்?
ITC மீது வழக்கு:
2021ம் ஆண்டு தில்லிபாபு என்பவர், மணாலிக்கு சென்ற போது, அங்கு ITC-யின் தயாரிப்புகளுள் ஒன்றான சன் ஃபீஸ்ட் மாரி லைட் பிஸ்கட் பாக்கெட் ஒன்றை வாங்கியிருக்கிறார்.
16 பிஸ்கட்டுகளைக் கொண்டிருக்க வேண்டிய அந்த பாக்கெட்டில், ஒரே ஒரு பிஸ்கட் குறைவாக, 15 பிஸ்கட்டுகள் மட்டுமே இருந்திருக்கிறது. இது குறித்து, தான் பிஸ்கட் வாங்கிய கடைக்காரரிடமும், ITC நிறுவனத்திடமும் கேள்வியெழுப்பி எந்தவொரு பதிலும் கிடைக்காத நிலையில், நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்.
வணிகம்
என்ன வழக்கு?
மேற்கூறிய சம்பவத்தைத் தொடர்ந்து, டிசம்பர் 2021ல் நுகர்வோர் நீதிமன்றத்தில் ITC நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார் தில்லிபாபு.
75 பைச என்ற விலையில் ஒரு பிஸ்கட்டைத் தயாரிக்கும் ITC நிறுவனம், ஒரு நாளில் 50 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளைத் தயாரிக்கிறது.
ஒரு பாக்கெட்டில் ஒரு பிஸ்கட் குறைவு என்றால், ஒரு நாளில் தயாரிக்கப்படும் பிஸ்கட் பாக்கெட்டுகள் மூலம் மட்டும் ரூ.29 லட்சம் வாடிக்கையாளர்களிடம் ITC மோசடி செய்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார் அவர். இது குறித்து ITC பதிலளிக்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் ITC-க்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
வணிகம்
ITC-யின் வாதம்:
கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ITC நிறுவனம், தாங்கள் எடையின் அடிப்படையிலேயே பிஸ்கட் பாக்கெட்டுகளை தயாரிப்பதாவும், எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல எனவும் தெரிவித்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பிஸ்கட் பாக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் 76 கிராம்கள் என்ற எடையை விட 74 கிராம்களே எடை கொண்டிருந்திருக்கிறன பிஸ்கட்டுகள்.
குறிப்பிட்டிருக்கும் எடையை விட 2 கிராம் எடை குறைவாக பிஸ்கட் பாக்கெட்டை விற்பனை செய்ததன் காரணமாக, முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் குறிப்பிட்ட பேட்ச் பிஸ்கட்டின் விற்பனையை நிறுத்த உத்தவிட்டிருக்கிறது நுகர்வோர் நீதிமன்றம்.
மேலும், இந்த வழக்கைத் தொடர்ந்த தில்லிபாபுவிற்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் ITC-க்கு உத்தரவிட்டிருக்கிறது நுகர்வோர் நீதிமன்றம்.