
வணிக சிலிண்டர் விலை குறைப்பு; சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.43.50 குறைந்தது
செய்தி முன்னோட்டம்
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து, இன்று (ஏப்ரல் 1) முதல் ரூ.1,921.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் கேஸ் சிலிண்டர்களை வழங்குகின்றன.
வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 19 கிலோ எடையிலும் கிடைக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் முதல் நாளன்று சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் திருத்தப்படுகின்றன.
இன்று அறிவிக்கப்பட்ட மாற்றத்தில், வணிக சிலிண்டர் விலை ரூ.1,965 லிருந்து ரூ.1,921.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustIn | வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை குறைந்தது!#SunNews | #CommercialCylinder | #CylinderPrice pic.twitter.com/eAZaWPYLvw
— Sun News (@sunnewstamil) April 1, 2025