LOADING...
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு
வணிக சிலிண்டர் விலை இனி ரூ.1911 விற்பனையாகவுள்ளது

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
May 01, 2024
10:29 am

செய்தி முன்னோட்டம்

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை, 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இதுநாள் வரை 1930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக சிலிண்டர் விலை இனி ரூ.1911 விற்பனையாகவுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலையை மாற்றம் செய்து நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாள் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.30.50 குறைந்தது. மறுபுறம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.

embed

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை

#NewsUpdate | சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 19 குறைந்து ₹1911க்கு விற்பனை 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ₹818.50க்கு விற்பனை #SunNews | #LPGprice | #Chennai pic.twitter.com/kkZ2inQeyu— Sun News (@sunnewstamil) May 1, 2024

Advertisement