பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: மத்திய அரசு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று இரவு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை தலா ரூ.2 குறைக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய விலை மார்ச் 15-ம் தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது". "இதன்மூலம் 58 லட்சம் கனரகவாகனங்கள்,6 கோடி கார்கள்,27 கோடி இருசக்கர வாகனங்களுக்கான எரிபொருள் செலவு குறையும்". முன்னதாக, மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையும் ரூ.100 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.