Page Loader
மறுசீரமைப்பு நடவடிக்கையில், சுமார் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய பைஜூஸ் திட்டம்
சுமார் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய பைஜூஸ் திட்டம்

மறுசீரமைப்பு நடவடிக்கையில், சுமார் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய பைஜூஸ் திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 27, 2023
03:23 pm

செய்தி முன்னோட்டம்

Edtech நிறுவனமான பைஜூஸ் , அதன் புதிய இந்திய CEO அர்ஜுன் மோகனின் வழிகாட்டுதலின் கீழ் புதிய சுற்று பணிநீக்கங்கள் உட்பட குறிப்பிடத்தக்க மறுசீரமைப்புப் பயிற்சியைத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நடவடிக்கையில் ஆட்குறைப்பு நடவடிக்கையும் உண்டு என செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 4000 பேர் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையானது மூத்த நிர்வாகச் செலவுகளைக் குறைப்பது மற்றும் சிறந்த பணப்புழக்க மேலாண்மைக்காக இயக்க கட்டமைப்புகளை எளிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மதிப்புமிக்க ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றாக பார்க்கப்படும் பைஜுஸ், கோவிட் கழலாட்டத்திற்கு பிறகு, மதிப்பீடு வெட்டுக்கள், நிதி சிக்கல்கள், பணிநீக்கங்கள், உயர்மட்ட ராஜினாமாக்கள் மற்றும் கடன் வழங்குபவர்களுடன் நடந்துகொண்டிருக்கும் சட்டப் போராட்டத்தை எதிர்கொண்டது.

card 2

பெயர்மாற்றம் செய்யப்படும் WhiteHat Jr 

இந்தியாவில், ஆன்லைன் கல்விக்கான தேவை, 2021 முதல் குறைந்து வருகிறது. இதனால், பைஜுஸ் நிறுவனம், அதன் செலவுகளைக் குறைக்கவும், செயல்பாடுகளை மேம்படுத்தவும் வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட, அர்ஜுன் மோகன் மற்றும் அவரின் குழு, நிறுவனத்தின் செயல்பாடுகளை சீரமைக்கவும் பணப்புழக்க நிர்வாகத்தை மேம்படுத்தவும் மறுசீரமைப்பு முயற்சியைத் தொடங்கியுள்ளது. இந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, பைஜூஸின் துணை நிறுவனமான WhiteHat Jr ஐ Byju's Future School என்று பெயர் மாற்றம் செய்யவிருப்பதாகவும் என்று செய்திகள் தெரிவித்துள்ளது. BYJU ஆகஸ்ட் 2020 இல் Whitehat ஐ $300 மில்லியனுக்கு வாங்கியது. கையகப்படுத்தியதில் இருந்து $100 மில்லியனுக்கும் அதிகமான தொகையை அதன் வளர்ச்சிக்கு செலவிட்டுள்ளது.