
மக்களே அலெர்ட்; மே 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏடிஎம் பரிமாற்றக் கட்டணங்களை உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் மே 1, 2025 முதல் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லாத ஏடிஎம்களில் பணம் எடுப்பது மற்றும் பேலன்ஸ் பார்ப்பதற்கான கட்டணங்கள் உயர உள்ளது.
இதனால் இலவச மாதாந்திர பரிவர்த்தனைகளை மீறும் வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
திருத்தப்பட்ட கட்டணங்களின்படி, ஒரு பரிவர்த்தனைக்கு பணம் எடுக்கும் கட்டணம் ₹17 முதல் ₹19 ஆகவும், பேலன்ஸ் பார்ப்பதற்கான கட்டணம் ₹6 முதல் ₹7 ஆகவும் உயரும்.
இதற்கிடையே இலவச பரிவர்த்தனைகளுக்கான கட்டண அமைப்பு மாறாமல் உள்ளது.
இதன்படி மெட்ரோ நகரங்களில் ஐந்து மற்றும் மெட்ரோ அல்லாத பகுதிகளுக்கு மூன்று பரிவர்த்தனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
செலவு அதிகரிப்பு
ஏடிஎம்களின் செயல்பாட்டு செலவுகள் அதிகரிப்பு
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) இந்த உயர்வை முன்மொழிந்தது.
மேலும், செயல்பாட்டு செலவுகள் அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி ஒயிட்-லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த அதிகரிப்பு தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் நெட்வொர்க்கிற்கு வெளியே உள்ள ஏடிஎம்களை நம்பியிருக்கும் வாடிக்கையாளர்களைப் பாதிக்கலாம்.
குறிப்பாக சிறிய வங்கிகள் மற்ற வங்கிகளின் ஏடிஎம் நெட்வொர்க்குகளைச் சார்ந்திருப்பதால் பாதிக்கப்படும்.
கூடுதலாக, அதிக பரிமாற்றக் கட்டணங்கள் கணக்கு பராமரிப்பு கட்டணங்களை அதிகரிக்க வழிவகுக்கும்.
கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்களைப் பயன்படுத்தவோ அல்லது டிஜிட்டல் கட்டண முறைகளுக்கு மாறவோ ஊக்குவிக்கப்படுகிறார்கள்.