5% பங்குகள் பொதுமக்கள் நல நிதியத்திற்கு! ஐபிஓவிற்கு முன்பாக ஆந்த்ரோபிக் நிறுவனம் அறிவிப்பு; முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஆந்த்ரோபிக், தனது நிறுவனப் பங்குகளில் தோராயமாக 5 சதவீதத்தை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆந்த்ரோபிக் பொதுநல நிதியம் (Anthropic Public Benefit Fund) என்ற பொது நல நிதியத்திற்கு வழங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதலுக்கு உட்பட்டு இந்த பங்குகள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளன. மேலும், நிறுவனத்தின் அடிப்படை மதிப்பிலிருந்து ஒவ்வொரு 50 சதவீத வளர்ச்சி எட்டப்படும் போதும், வாரியத்தின் ஒப்புதலுடன் கூடுதல் 2 சதவீத பங்குகள் இந்த நதியத்திற்கு மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பாதிப்புகள்
செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் வேலைவாய்ப்பு பாதிப்புகள் குறித்த ஆய்வு
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் வேலைவாய்ப்பு சந்தையில் உருவாகும் சவால்களை ஆராயவும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என ஆந்திரோபிக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஏற்கெனவே இந்த சவால்களை சமாளிக்க $200 மில்லியன் தொகையை ஒதுக்கீடு செய்துள்ள அந்த நிறுவனம், லாபநோக்கற்ற அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் தங்கள் சொத்தில் 80 சதவீதத்தை தானமாக வழங்க உறுதியளித்துள்ள நிலையில், ஊழியர்களும் தங்களது பங்குகளை பொதுநலப் பணிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
ஐபிஓ வெளியீடு
நவம்பரில் ஐபிஓ வெளியீடு
அடுத்த மாதம் (நவம்பர்) பங்குச் சந்தையில் களமிறங்கத் தயாராகி வரும் ஆந்த்ரோபிக் நிறுவனம், தனது மூன்றாம் காலாண்டில் $16.8 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளதாக முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்றாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், தனது 261 பக்க ஐபிஓ அறிக்கையில் 80-க்கும் மேற்பட்ட பக்கங்களை ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய அபாயங்கள், சுய பாதுகாப்பு நடத்தை முறைகள் மற்றும் தகவல் கையாளுதல் போன்ற அச்சுறுத்தல்கள் குறித்தே எச்சரிக்கையாகப் பதிவு செய்துள்ளது.