இன்று முதல் அமுல் பால் விலை லிட்டருக்கு ₹ 2 உயர்கிறது
பிரபல அமுல் நிறுவனத்தின் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ₹ 2 உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பால் உற்பத்தி மற்றும் செயல்பாட்டு செலவின் அதிகரிப்பு காரணமாக, குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (ஜிசிஎம்எம்எஃப்) இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது. ஜூன் 3 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து வகைகளிலும் அமுல் பாலின் விலை லிட்டருக்கு ₹ 2 உயர்த்தப்பட்டுள்ளது என்று 'அமுல்' பிராண்டின் கீழ் பால் மற்றும் பால் பொருட்களை சந்தைப்படுத்தும் GCMMF இன் MD ஜெய்ன் மேத்தா தெரிவித்தார். இந்த விலை ஏற்றம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.
அமுல் பால் விலை உயர்கிறது
சென்ற ஆண்டு உயர்த்தப்பட்ட பால் விலை
கடைசியாக GCMMF, பால் விலையை கடந்த பிப்ரவரி 2023இல் உயர்த்தியது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய உயர்வு படி, 500 மில்லி அமுல் எருமை பால், 500 மில்லி அமுல் கோல்ட் பால் மற்றும் 500 மில்லி அமுல் சக்தி பால் போன்ற வகைகளுக்கான, பால் விலை முறையே ₹ 36, ₹ 33 மற்றும் ₹ 30 ஆக உயரும். GCMMF படி, பால் மற்றும் பால் பொருட்களுக்காக நுகர்வோர் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயிலும் கிட்டத்தட்ட 80 பைசாவை, அமுல், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்குகிறது. "விலை திருத்தம் நமது பால் உற்பத்தியாளர்களுக்கு லாபகரமான பால் விலையைத் தக்கவைக்கவும், அதிக பால் உற்பத்திக்கு அவர்களை ஊக்குவிக்கவும் உதவும்" என்று அது மேலும் கூறியது.