டிசம்பர் 20ல் தொடங்குகிறது புதிய கியா சோனெட்டுக்கான முன்பதிவு
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புதிய சோனெட் காம்பேக்ட் எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா. இந்தப் புதிய அப்டேட் செய்யப்பட்ட சோனெட் மாடலை, வரும் டிசம்பர் 20ம் தேதி முதல் ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவித்திருக்கிறது கியா. புதிய அப்டேட் செய்யப்பட்ட மாடலில், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், போஸ் மியூசிக் சிஸ்டம், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்கியிருக்கிறது கியா நிறுவனம்.
கியா சோனெட் ஃபேஸ்லிப்ட்:
புதிய அப்டேட் செய்யப்பட்ட சோனெட் மாடலை மூன்று இன்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யவிருக்கிறது கியா. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் என மூன்று விதமான இன்ஜின் தேர்வுகளைக் கொண்டிருக்கவிருக்கிறது புதிய அப்டேட்டட் கியா சோனெட். இது மட்டுமின்றி, 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு iMT ஆட்டோமேட்டிக், 7 ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் மற்றும் டார்க் கண்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் எனப் பல விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களையும் புதிய சோனெட்டில் கொடுக்கவிருக்கிறது கியா.