இந்தியாவில் வெளியானது வால்வோவின் புதிய 'C40 ரீசார்ஜ்' எலெக்ட்ரிக் கார்
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் முழுமையான எலெக்ட்ரிக் காரான XC40 ரீசார்ஜிற்கு அடுத்த படியாத, தங்களுடைய இரண்டாவது முழுமையான எலெக்ட்ரிக் காரான C40 ரீசார்ஜை தற்போது வெளியிட்டிருக்கிறது வால்வோ. XC40 ரீசார்ஜின் எஸ்யூவி கூப் வடிவமே இந்த C40 ரீசார்ஜ் எனவும் கூறலாம். ஆனால், XC40 ரீசார்ஜின் பெட்ரோல் இன்ஜின் கொண்ட வடிவமும் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் நிலையில், C40 ரீசார்ஜை எலெக்ட்ரிக் வடிவத்தில் மட்டுமே விற்பனை செய்யவிருக்கிறது வால்வோ. XC40 ரீசார்ஜின் சில டிசைன் மற்றும் சில அம்சங்களை மாற்றியும், சில டிசைன் எலமண்ட்களை அப்படியேவும் C40 ரீசார்ஜில் அளித்திருக்கிறது வால்வோ.
வால்வோ C40 ரீசார்ஜ்: எலெக்ட்ரிக் மோட்டா, ரேஞ்சு மற்றும் விலை
உட்பக்கம் XC40யின் டேஷ்போர்டை அப்படியே C40யிலும் கொடுத்திருக்கிறது வால்வோ. XC40யின் பூட் ஸ்பேஸை விட, C40யில் 39 லிட்டர் குறைவாக 413 லிட்டர் பூட் ஸ்பைஸைக் கொடுத்திருக்கிறது வால்வோ. வால்வோவின் CMA கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் C40 ரீசார்ஜில் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புடன், 530கிமீ ரேஞ்சைக் கொடுக்கும் வகையிலான 78kWh பேட்டரியைக் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். C40யின் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களும் ஒட்டுமொத்தமாக, 408hp பவரையும், 660Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கின்றன. 100கிமீ வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிப்பிடிக்கிறது இந்த C40 ரீசார்ஜ். கியாவின் EV6 மற்றும் அயானிக் 5 ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக வெளியாகியிருக்கும் இந்த C40 ரீசார்ஜை, இந்தியாவில் ரூ.61.25 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது வால்வோ.