வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது ஃபோக்ஸ்வாகன்.. என்ன தெரியுமா?
புதிய வாகனம் அறிமுகம்: தங்களது வெர்ட்டஸ் (Virtus) மற்றும் டைகூன் (Taigun) ஆகிய மாடல்கள் பற்றய அறிவிப்புகளை இன்று வெளியிட்டிருக்கிறது கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வாகன். ஃபோக்ஸ்வாகன் வெர்ட்டஸ்: தங்களது வெர்ட்டஸ் மாடலின் டாப் வேரியன்டான 1.5 TSI இன்ஜின் கொண்ட GT ப்ளிஸில், 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் மட்டுமே விற்பனை செய்து வருகிறது ஃபோக்ஸ்வாகன். ஆனால், அடுத்து புதிதாக GT ப்ளஸ் வேரியன்டில் 1.5 TSI இன்ஜினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்டையும் அறிமுகப்படுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். தற்போது ரூ.18.57 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது இந்த GT ப்ளஸ் ஆட்டோமேட்டிக் வேரியன்ட். இதன் மேனுவல் வேரியன்டானது இதனை விட குறைவான விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வாகன் டைகூன்:
அதேபோல் டைகூனில், 1.5 TSI இன்ஜின் கொண்ட GT ட்ரிம்மில் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்டும், GT ப்ளஸ் ட்ரிம்மில் DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்டையும் விற்பனை செய்து வருகிறது ஃபோக்ஸ்வாகன். ஆனால், இனி லோ-எண்டான GT ட்ரிம்மில் கூடுதலாக DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்டையும், ஹை-எண்டான GT ப்ளிஸ் ட்ரிம்மில் கூடுதலாக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்டையும் வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். இந்த மாற்றங்களுக்கு ஏற்ப விலையிலும் கொஞ்சம் கூடுதலாகவும், குறைவாகவும் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேற்கூறிய புதிய வேரியன்ட்கள் அனைத்தையும் வரும் ஜூன் மாதம் அந்நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது.