டொயோட்டா இன்னோவா கார்களின் விலை கடுமையாக உயர்வு
ஜப்பானிய வாகன நிறுவனமான டொயோட்டா, அதன் மிகவும் பிரபலமான ஏழு இருக்கைகள் கொண்ட எம்பிவி மாடலான இன்னோவா கிரிஸ்டாவின் விலையை இந்தியாவில் ரூ.25,000 அதிகரித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்துவதாக கடந்த மாதமே டொயோட்டா அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த முடிவை அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம், தற்போது இன்னோவா கிரிஸ்டா ரூ.19.99 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இது GX, VX மற்றும் ZX என மூன்று வகைகளில் வழங்கப்படுகிறது. இதற்கிடையே, நேற்று டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலையையும் ரூ.42,000 உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
VX மற்றும் ZX மாடல்களில் விலை உயர்வின் தாக்கம்
விலை உயர்வு இன்னோவா கிரிஸ்டாவின் மிட்-ஸ்பெக் VX மற்றும் ரேஞ்ச்-டாப்பிங் ZX வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரண்டுமே ரூ. 25,000 அதிகரித்துள்ளது. விலை மாற்றத்திற்கு பிறகு, டொயோட்டா அடிப்படை GX மாடலின் விலை ரூ.19.99 லட்சம், VX ஏழு இருக்கைகள் மற்றும் VX எட்டு இருக்கைகள் கொண்ட மாடல்களின் விலை முறையே ரூ. 24.39 லட்சம் மற்றும் ரூ.24.44 லட்சமாக உள்ளது. டாப்-ஆஃப்-லைன் ZX ஏழு இருக்கைகள் கொண்ட பதிப்பு இப்போது ரூ.26.05 லட்சம் முதல் கிடைக்கிறது. புதுப்பிக்கப்பட்ட விலைகளின் அடிப்படையில், இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலை ரூ.19.77 லட்சம் முதல் ரூ.30.68 லட்சமாக உள்ளது.