அதிக ரேஞ்சுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை சூடுபிடித்து வருகிறது. பல்வேறு முன்னணி வெளிநாட்டு நிறுவனங்களுடன், இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களும் முடிந்த அளவிற்கு குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை வழங்க முயற்சி செய்து வருகின்றன.
எலெக்ட்ரிக் வாகன கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனினும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குதற்கு முக்கியமான தடைக்கல்லாக இருப்பது ரேஞ்சு தான். அதிக ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் தொலைதூரப் பயணங்களுக்கு சிறப்பான தேர்வாக இருக்கும்.
இந்தியாவில் அதிக ரேஞ்சுடன் விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் என்னென்ன? அதன் பட்டியல் தான் இது.
BYD
BYD அட்டோ 3 (BYD Atto 3):
ஸ்கல்ப்டட் கூடு, ஸ்லீக்கான குரோம் கிரில், எல்இடி முகப்பு விளக்குகள், L வடிவ DRLகள், இன்டிகேட்டரில் பொருத்தப்பட்ட ORVM, ரூஃப் ரெயில், ஷார்க் ஃபின் ஆண்டனா மற்றும் ஸ்பிளிட் எல்இடி டெயில் விளக்குகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது சீன ஆட்டோமொபைல் நிறுவனமான BYD-யின் அட்டோ 3.
உட்பக்கம் இடவசதி மிக்க 5 சீட்டர் கேபின், 12.8 இன்ட் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஏழு பேக்குகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சிங்கிள் சார்ஜில் 521 கிமீ ரேஞ்சு கொண்ட இந்த அட்டோ 3 மாடலானது, இந்தியாவில் ரூ.33.9 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஹூண்டாய்
ஹூண்டாய் அயானிக் 5 (Hyundai IONIQ 5):
கிளாம்ஷெல் பானெட், எல்இடி முகப்பு விளக்குகள், சதுர வடிவ DRLகள், கிரில்லுக்குப் பதிலாக பிளாக் பேண்டு, பிக்சலாக்கப்பட்ட எல்இடி டெயில் விளக்குகள் மற்றும் 20 இன்ச் வீல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது ஹூண்டாயின் அயானிக் 5 எலெக்ட்ரிக் கார்.
5 சீட் கேபின் கொண்ட இந்த அயானிக் 5 மாடலில் கிளாஸ் ரூஃப், பவர் அட்ஜஸ்டபிள் சீட்கள், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் ஆடியோ சிஸ்டம், 12.3 இன்ச் ஸ்கிகீன் செட்டப், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் இரண்டாம் நிலை ADAS பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
631 கிமீ ரேஞ்சு கொண்ட இந்த அயானிக் 5 மாடலானது இந்தியாவில் ரூ.45.95 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கியா
கியா EV6 (Kia EV6):
கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடலில், ஸ்வெப்ட் பேக் எல்இடி முகப்பு விளக்குகள், பூமராங் வடிவ DRLகள், இன்டிகேட்டரில் பொருத்தப்பட்ட ORVM, 19 இன்ச் வீல்கள் மற்றும் முழு அகலத்திற்கும் நீளக்கூடிய பின்பக்க விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், 14 ஸ்பீக்கர்கள் கொண்ட மெரிடியன் ஆடியோ சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் ADAS பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
708 கிமீ ரேஞ்சு கொண்ட இந்த எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடலை இந்தியாவில் ரூ.60.95 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது ஹூண்டாய்.
வால்வோ
வால்வோ C40 ரீசார்ஜ் (Volvo C40 Recharge):
ஸ்லோப்பிங் ரூஃப்லைன், க்ளோஸ்டு ஆஃப் கிரில், எல்இடி முகப்புவிளக்குகள் மற்றும் DRLகள், டிசைனர் வீல்கள், ரேக்டு விண்டுஷீல்டு, ஷார்க் ஃபின் ஆண்டனா மற்றும் எல்இடி டெயில் விளக்குகளைக் கொண்டிருக்கிறது வால்வோ C40 ரீசார்ஜ்.
இதன் சொகுசு கோபினில் ஹார்மன் கார்டன் சவுண்டு சிஸ்டம், சன்ரூஃப், ஏர் ப்யூரிஃபையர், 9.0 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பல ஏர்பேக்குகள் மற்றும் ADAS பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
530 கிமீ ரேஞ்சு கொடுக்கக்கூடிய இந்த எலெக்ட்ரிக் கூப் எஸ்யூவியானது இந்தியாவில் ரூ.62.95 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பிஎம்டபிள்யூ
பிஎம்டபிள்யூ i4 (BMW i4):
ப்யூச்சரிஸ்டிக்கான டிசைன், ப்ளூ அக்சென்டுடன் கூடிய பெரிய கிட்னி கிரில், DRLகளுடன் கூடிய ஸ்லீக்கான எல்இடி முகப்பு விளக்குகள், குரோம் லைண்டு விண்டோஸ், ரேப் அரவுண்டு டெயில் விளக்குள் மற்றும் 17 இன்ச் வீல்களைக் கொண்டிருக்கிறது பிஎம்டபிள்யூ i4.
5 சீட்டர் கேபின் கொண்ட i4-ல், 17 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சவுண்டு சிஸ்டம், 12.3 இன்ட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் 14.9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
590 கிமீ ரேஞ்சுடன் கூடிய இந்த எலெக்ட்ரிக் செடானை இந்தியாவில் ரூ.72.5 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது பிஎம்டபிள்யூ.