Loading...
டெஸ்லாவின் புதிய செல்ஃப்-டிரைவிங் அப்டேட்: 'GTA கேம் போல உள்ளது' என எலான் மஸ்க் வர்ணிப்பு
டெஸ்லாவின் புதிய செல்ஃப்-டிரைவிங் அப்டேட்

டெஸ்லாவின் புதிய செல்ஃப்-டிரைவிங் அப்டேட்: 'GTA கேம் போல உள்ளது' என எலான் மஸ்க் வர்ணிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 22, 2026
04:27 pm

செய்தி முன்னோட்டம்

டெஸ்லா நிறுவனம் தனது ஃபுல் செல்ஃப்-டிரைவிங் மென்பொருளின் புதிய பதிப்பான எஃப்எஸ்டி வி15 அப்டேட்டை சனிக்கிழமை (நவம்பர் 21) சில வாகனங்களுக்கு வெளியிட்டுள்ளது. இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெஸ்லா ரியாலிட்டி வியூ என்ற புதிய அம்சம் ஓட்டுநர்களுக்குச் சாலையின் சுற்றுப்புறங்களை ஒரு வீடியோ கேம் போலத் துல்லியமாகக் காட்சிப்படுத்துகிறது. புதிய ஜிடிஏ 6 (GTA 6) வீடியோ கேம் உலகம் முழுவதும் வைரலாகி வரும் நிலையில் இந்தப் புதிய அம்சத்தைக் குறிப்பிட்ட டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், இது பார்ப்பதற்கு ஜிடிஏ போலவே உள்ளது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Embed

டெஸ்லா ரியாலிட்டி வியூ

மூன்றாம் நபர் பார்வையில் சாலையைக் காட்டும் 'டெஸ்லா ரியாலிட்டி வியூ' தொழில்நுட்பம்

டெஸ்லா ரியாலிட்டி வியூ அம்சமானது ரேசிங் வீடியோ கேம்களில் காரின் பின்புறத்திலிருந்து பார்க்கும் மூன்றாம் நபர் பார்வை கோணத்தில் காரையும் அதன் சுற்றுப்புறங்களையும் புகைப்படத் தரத்தில் காட்டுகிறது.

சாதாரண டிஜிட்டல் சாலை வரைபடத்திற்குப் பதிலாகக் கார் அடுத்து என்ன செய்யத் திட்டமிடுகிறது என்பதை ஓட்டுநர்கள் எளிதில் புரிந்துகொள்ளவே இந்த மேம்படுத்தப்பட்ட காட்சிப்படுத்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பதிவிட்ட நியூராலிங்க் இயக்குநர் ஷிவோன் ஜிலிஸ் இன்னும் சற்று பெரிதாக்கிப் பார்த்தால் படைப்பாளர்களின் திரையில் நமது உருவகப்படுத்துதல் ஓடுவதைக் காணலாம் என கருத்துத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

புதிய மேம்பாடுகள்

சாலைப் பள்ளங்கள், பள்ளி மண்டலங்கள் மற்றும் வேகக் கேமராக்களைக் கையாளும் புதிய மேம்பாடுகள்

புதிய எஃப்எஸ்டி வி15 அப்டேட்டில் காட்சி மாற்றங்களுடன் சேர்த்துப் பல முக்கியப் பாதுகாப்பு மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சாலையில் உள்ள பள்ளங்கள், பள்ளி மண்டலங்கள், வேகக் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சாலையில் தேங்கியுள்ள தண்ணீர் ஆகியவற்றை முன்பை விடத் துல்லியமாகக் கையாளும் வகையில் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் புதிய அப்டேட்கள் சில பகுதிகளில் முன்னேற்றத்தைத் தந்தாலும் மற்ற பகுதிகளில் புதிய சிக்கல்களை உருவாக்கலாம் எனத் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ADVERTISEMENT

ஓட்டுநர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

வீடியோ கேம் போலத் தெரிந்தாலும் சாலை நிஜமானது

காரின் திரையில் தோன்றும் காட்சிகள் வீடியோ கேம் போல சுவாரசியமாக இருந்தாலும் நிஜச் சாலையில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் உள்ளனர் என்பதை ஓட்டுநர்கள் மறந்துவிடக் கூடாது.

டெஸ்லாவின் எஃப்எஸ்டி அமைப்பு இன்னும் ஓட்டுநரின் மேற்பார்வையில் இயங்கும் தொழில்நுட்பமே தவிர முழுமையான தானியங்கி அமைப்பு அல்ல.

எனவே ஓட்டுநர்கள் எப்போதும் சாலையில் முழுக் கவனம் செலுத்தித் தேவைப்படும்போது காரின் கட்டுப்பாட்டை உடனடியாகக் கையில் எடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT