₹50,000 வரை தள்ளுபடி; கர்வ்வ் கூபே எஸ்யூவி மாடலுக்கு சலுகைகளை அறிவித்தது டாடா
செய்தி முன்னோட்டம்
டாடா மோட்டார்ஸ் அதன் கர்வ்வ் கூபே எஸ்யூவி மாடல் மீது குறிப்பிடத்தக்க அளவில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 2024 இல் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல் கார்களை வாங்குபவர்கள், தற்போது மாடலின் ஆண்டு மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து ₹50,000 வரை தள்ளுபடியைப் பெறலாம்.
இதன்படி, கர்வ்வ் கூபே எஸ்யூவி 2025 மாடலின் பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளுக்கு, டாடா ₹20,000 ஸ்க்ராப்பேஜ் போனஸ் வழங்குகிறது. மேலும் எக்ஸ்சேஞ்ச் போனஸாக ₹13,793 வழங்கப்படுகிறது.
அதே சமயம் 2024 மாடல்கள் ₹30,000 ரொக்க தள்ளுபடியுடன் வருகின்றன. இது மொத்த தள்ளுபடி நன்மையை ₹50,000 ஆக ஆக்குகிறது.
இருப்பினும், இந்த தள்ளுபடிகள் அனைத்தும் டீலர்ஷிப்கள் மற்றும் கார்களின் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து மாறுபடும் எனத் தெரிகிறது.
எலக்ட்ரிக் வாகனம்
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சலுகை
கர்வ்வ் கூபே எஸ்யூவிவின் எலக்ட்ரிக் மாடலுக்கு ₹20,000 ஸ்க்ராப்பேஜ் போனஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ₹19,048 வழங்கப்படுகிறது.
தள்ளுபடி சலுகைகளுடன் கூடுதலாக, புதிய நைட்ரோ கிரிம்சன் நிற கர்வ்வ் கூபே காரையும் டாடா அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், கர்வ்வ் கூபே தற்போது ஏழு வண்ணங்களில் கிடைக்கிறது. என்ஜினைப் பொறுத்தவரை டாடா கர்வ்வ் பின்வரும் மூன்று வேரியண்ட்களில் வருகிறது.
1.2-லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல், 118 எச்பி, 170 நிமீ
1.2-லிட்டர் ஹைபரியன் பெட்ரோல், 123 எச்பி, 225 நிமீ
1.5-லிட்டர் டீசல், 116 எச்பி, 260 நிமீ
அனைத்து என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டிசிஏ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
பேட்டரிகள்
இரண்டு வகையான பேட்டரிகள்
டாடா கர்வ்வ் கூபே எஸ்யூவியின் எலக்ட்ரிக் மாடல் பின்வரும் இரண்டு வகையான பேட்டரி தேர்வுகளைக் கொண்டுள்ளது.
45 கிலோவாட் (147 எச்பி, 215 நிமீ, 430 கிமீ வரம்பு)
55 கிலோவாட் (164 எச்பி, 215 நிமீ, 502 கிமீ வரம்பு)
போட்டி விலை நிர்ணயம் மற்றும் பல்வேறு பவர்டிரெய்ன் தேர்வுகளுடன், கூபே எஸ்யூவி இந்த குறுகிய கால தள்ளுபடிகள் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கிறது.