Loading...
மாருதி டிசையருக்கு பெரிய ஆப்பு? ரூ.5.29 லட்சத்தில் அறிமுகமானது டாடா ஏரிஸ்; 5 தரமான அம்சங்கள்
ரூ.5.29 லட்சத்தில் அறிமுகமானது டாடா ஏரிஸ்

மாருதி டிசையருக்கு பெரிய ஆப்பு? ரூ.5.29 லட்சத்தில் அறிமுகமானது டாடா ஏரிஸ்; 5 தரமான அம்சங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2026
02:18 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய காம்பேக்ட் செடான் சந்தையில் தனக்கென தனி முத்திரை பதித்த டிகோர் மாடலுக்கு மாற்றாக, புதிய டாடா ஏரிஸ் காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. தொடக்க சலுகை விலையாக ரூ.5.29 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த கார், இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மாருதி சுஸூகி டிசையர் காருக்கு மிகக் கடுமையான போட்டியைக் கொடுத்துள்ளது. வரும் அக்டோபர் 11, 2026 முதல் இதன் விநியோகம் தொடங்கவுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

கூலிங் சீட்

பெரிய டச்ஸ்கிரீன் மற்றும் கூலிங் சீட் வசதி

மாருதி டிசையர் காரில் 9 இன்ச் டச்ஸ்கிரீன் மட்டுமே உள்ள நிலையில், டாடா ஏரிஸ் காரின் உயர் ரக மாடல்களில் 10.25 இன்ச் அளவில் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடைன்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஆதரிக்கிறது.

மேலும், இந்திய கோடைகாலத்திற்கு மிகவும் பயனுள்ள காற்றோட்ட வசதி கொண்ட முன்புற இருக்கைகள் ஏரிஸ் காரின் அகாம்பிளிஷ்ட் மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

டேஷ்கேம் பாதுகாப்பு

360 டிகிரி கேமரா மற்றும் டேஷ்கேம் பாதுகாப்பு

பாதுகாப்பு மற்றும் ஓட்டுனர் வசதிக்காக டாடா ஏரிஸ் காரில் 360 டிகிரி கேமரா மற்றும் பிளைண்ட் வியூ மானிட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறுகிய பாதைகளிலும், லேன் மாறும்போது ஓட்டுநருக்குத் தெளிவான பார்வையைக் கொடுக்கிறது.

இதுதவிர, காரிலேயே நிறுவனத்தால் பொறுத்தப்பட்ட ஃபேக்டரி ஃபிட்டட் டேஷ்கேம் வசதியும் உள்ளது.

இந்த அதிநவீன கேமரா பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் மாருதி டிசையர் காரில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

பேடில் ஷிஃப்டர்

தானியங்கி வைப்பர் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள்

மழை பெய்யும்போது தானாக இயங்கும் வைப்பர்கள் மற்றும் குளிர்ந்த பானங்களை வைக்க உதவும் கூல்டு குளோவ்பாக்ஸ் வசதியும் ஏரிஸ் காரில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆட்டோமேட்டிக் மாடல்களில் ஸ்டீயரிங் வீலிலேயே கியர் மாற்றக்கூடிய பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி டிசையர் ரூ.6.31 லட்சம் முதல் தொடங்கும் நிலையில், ரூ.5.29 லட்சம் என்ற குறைந்த ஆரம்ப விலையில் அதிக வசதிகளுடன் வந்துள்ள ஏரிஸ் கார் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT