மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
கொரோனாவின் போது ரயில் சேவையில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்தக்கோரி நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில், கொரோனா பரவும் அச்சத்தால், மூத்த குடிமக்களுக்கான சலுகையை நிறுத்தி வைத்திருந்தது. அதற்கு முன் ரயில் கட்டணத்தில் சலுகை கட்டணம் வழங்கப்பட்டது. இதில், 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கு ரயில் பயணத்தில் அனைத்து கிளாஸ்களிலும் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு, அதில், ஆண்களுக்கு 40 சதவீதம், 58 வயதை எட்டிய பெண்களுக்கு 50 சதவீதம் என சலுகை வழங்கப்பட்டது. ஆனால் கொரோனாவிற்கு பின் இச்சலுகை மூன்று வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் தொடங்க வேண்டும்
இந்நிலையில், மீண்டும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை அமல்படுத்துமாறும், கொரோனா நோய் பாதிப்பு குறைந்து, நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளது. ரயில்வே துறையும் குறிப்பிட்ட வளா்ச்சியைக் கண்டுள்ளது. எனவே மீண்டும் கட்டண சலுகை தரவேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு வலியுறுத்துள்ளனர். ஆனால், ரயில்வே துறை அமைச்சகம் பயணக் கட்டணச் சலுகை நடைமுறையைக் கொண்டு வருவது குறித்து எவ்வித உடனடி திட்டம் இல்லை. ஏற்கெனவே, அனைத்து ரயில் பயணிகளுக்கும் 50-55 சதவீத பயணக் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.