இணையத்தில் கசிந்த 'ஓலா'வுடைய புதிய எலெக்ட்ரிக் காரின் டிசைன்
எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் கார் ஒன்ற இந்தியாவில் வெளியிடவிருப்பதாக ஓலா சில வருடங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. ஆனால், அதன் பிறகு அந்த எலெக்ட்ரிக் கார் குறித்த எந்தவொரு அப்டேட்டையும் அந்நிறுவனம் அளிக்கவில்லை. ஆனால், தற்போது பேட்டண்ட் செய்வதற்காக வழங்கப்பட்ட ஓலாவுடைய புதிய எலெக்ட்ரிக் காரின் டிசைன் இணையத்தில் கசிந்து வைரலாகியிருக்கிறது. கிட்டத்தட்ட டெஸ்லா காரின் டிசைனை ஒத்திருக்கிறது ஓலா எலெக்ட்ரிக் காரின் டிசைன். செடானின் தோற்றத்துடன், பின்பக்கம் கூப் மாடல் போன்ற ரூஃப்லைனைக் கொண்டிருக்கிறது ஓலாவின் புதிய கார். முன்பக்கம் கிரில் எதுவும் இல்லாமல், மிகவும் ஸ்லீக்கான, ஸ்டைலான முகப்புவிளக்கு டிசைனைக் கொண்டிருக்கிறது. இதே டிசைன் தான் இந்தக் கார் வெளியாகும் போது இருக்கும் எனக் கூற முடியாது.
ஓலாவின் எலெக்ட்ரிக் கார்:
தங்களுடைய எலெக்ட்ரிக் காரின் உள்பக்கம் எப்படி இருக்கும் என இதற்கு முன்பே அப்டேட்களை வெளியிட்டிருக்கிறது ஓலா. இரண்டு ஸ்போக்குகளை மட்டுமே கொண்ட எண்கோண வடிவிலான ஹாப்டிக் கண்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல். தனியாகப் பயன்படுத்தும் வகையிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், நடுவில் பெரிய ஃப்ளோட்டிங் டிசைனுடன் கூடிய டச்ஸ்கிரீன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஓலா காரின் உள்பக்கம். 500கிமீ ரேஞ்சு கொண்ட 70-80kWh பேட்டரியை அந்நிறுவனம் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 0-100 கிமீ வேகத்தை நான்கு நொடிகளுக்குள் எட்டும் வகையிலான எலெக்ட்ரிக் மோட்டாரையும் அளிக்கத் திட்டமிட்டு வருகிறது. கண்டிப்பாக பட்ஜெட் விலையில் இந்த எலெக்ட்ரிக் காரை வெளியிட அந்நிறுவனம் திட்டமிடவில்லை. குறைந்தபட்டம் ரூ.25 லட்சத்திற்கும் மேலான விலையிலேயே இதனை வெளியிடத் திட்டமிட்டுகிறது ஓலா.