NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / 24 மணிநேரத்தில் 15,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள்; எம்ஜி விண்ட்சர் எலக்ட்ரிக் கார் சாதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    24 மணிநேரத்தில் 15,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள்; எம்ஜி விண்ட்சர் எலக்ட்ரிக் கார் சாதனை
    24 மணிநேரத்தில் 15,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்ற எம்ஜி விண்ட்சர் இவி

    24 மணிநேரத்தில் 15,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள்; எம்ஜி விண்ட்சர் எலக்ட்ரிக் கார் சாதனை

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 07, 2024
    02:40 pm

    செய்தி முன்னோட்டம்

    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் சமீபத்திய மின்சார வாகனமான விண்ட்சர், அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் 15,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்று இந்தியாவில் ஒரு புதிய சாதனையை முறியடித்துள்ளது.

    இந்த மைல்கல், நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனத்திற்கான அதிகபட்ச ஒற்றை நாள் முன்பதிவுகளைக் குறிக்கிறது.

    விண்ட்சரின் விலை ₹13.5 லட்சம் முதல் ₹15.5 லட்சம் வரையில் உள்ளன. எக்சைட் மற்றும் எசென்ஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்களில் வருகிறது.

    தனித்துவமான 'பேட்டரி ஒரு சேவை (BaaS)' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த எலக்ட்ரிக் வாகனத்தை வாங்கலாம். எம்ஜி மோட்டார் வின்ட்ஸருக்காக ஒரு புதுமையான BaaS திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

    BaaS 

    BaaS திட்டத்தின் சிறப்பம்சங்கள் 

    இந்த திட்டத்தின் கீழ், பேட்டரியின் விலை காரின் விலையில் சேர்க்கப்படவில்லை. இதனால் வாங்குபவர்கள் வெறும் ₹9.99 லட்சத்திற்கு எக்சைட் வேரியண்ட்டை வாங்க முடியும்.

    வாடிக்கையாளர்கள் பேட்டரி பயன்பாட்டிற்காக ஒரு கிலோமீட்டருக்கு கூடுதலாக ₹3.5 செலுத்துகிறார்கள்.

    இதனால் எலெக்ட்ரிக் காரை மிகவும் மலிவு மற்றும் நெகிழ்வானதாக மாற்றுகிறது. எனவே, 60,000 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வாகனத்தை ஓட்டினால், வெறும் ₹2.10 லட்சம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

    விண்ட்சர் ஒரு 38கிலோவாட் பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 331கிமீ வரம்பை வழங்குகிறது.

    இது 136 எச்பி மற்றும் 200நியூட்டன்மீட்டர் வழங்கும் முன் அச்சில் பொருத்தப்பட்ட நிரந்தர காந்த ஒத்திசைவான மோட்டார் உடன் வருகிறது.

    கூடுதல் வசதிகள்

    விண்ட்சரின் கூடுதல் அம்சங்கள் மற்றும் சார்ஜிங் நேரம்

    இந்த கார் 15.6 இன்ச் தொடுதிரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் கண்ணாடி கூரை, முழு எல்இடி லைட்டிங் சிஸ்டம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது.

    விண்ட்சர் ஒரு இயங்கும் டெயில்கேட், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஆறு ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

    இது எக்கோ+, எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என நான்கு இயக்க முறைகளைப் பெறுகிறது.

    வெறும் 40 நிமிடங்களில் பேட்டரி பேக்கை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்று எம்ஜி கூறுகிறது.

    விண்ட்சர் டாடா கர்வ்வ், நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 போன்ற அதே விலையுள்ள மின்சார எஸ்யூவிக்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலக்ட்ரிக் கார்
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியா
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    எலக்ட்ரிக் கார்

    2024இல் ஐந்து புதிய எஸ்யூவிகளை களமிறக்க மஹிந்திரா முடிவு மஹிந்திரா
    2024-ல் புதிய 'SU7' எலெக்ட்ரிக் செடானை அறிமுகப்படுத்தவிருக்கும் ஷாவ்மி சியோமி
    அதிக ரேஞ்சுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் எலக்ட்ரிக் வாகனங்கள்
    புதிய 'IONIQ 7' எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை உருவாக்கி வரும் ஹூண்டாய் ஹூண்டாய்

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    மின்சார வாகனங்களுக்காக அமெரிக்காவில் முதல் வயர்லெஸ் சார்ஜிங் சாலை அறிமுகம் அமெரிக்கா
    விரைவில் புதிய 'ஏத்தர் 450 ஏபெக்ஸ்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடவிருக்கும் ஏத்தர் எனர்ஜி ஏத்தர்
    1 லட்சம் கிமீ பயன்பாட்டை வழங்கும் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிக்கள் ஏத்தர்
    அடுத்து இந்தியாவில் வெளியாகவிருக்கும் எலெக்ட்ரிக் கார்கள் எலக்ட்ரிக் கார்

    இந்தியா

    சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றிய சைபர் மோசடி கும்பல்ல; ரூ.7 கோடியை இழந்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் சைபர் கிரைம்
    காந்தி ஜெயந்தி 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள் மகாத்மா காந்தி
    வருமான வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு வருமான வரி அறிவிப்பு
    பாதுகாப்பு குறைபாடு; வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அப்டேட் கொடுத்த ராயல் என்ஃபீல்டு ராயல் என்ஃபீல்டு

    ஆட்டோமொபைல்

    ஏர்பேக் குறைபாட்டால் 51 மில்லியன் வாகனங்களை திரும்பப் பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    ரூ.7.99 லட்சம் ஆரம்ப விலையில் பசால்ட் கூபே-எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது சிட்ரோயன் எஸ்யூவி
    ஹைபிரிட் கார் வைத்துள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் வாகனம்
    கார்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வாகன உற்பத்தியாளர்கள் முடிவு கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025