LOADING...
மாருதி சுஸூகி விக்டோரிஸ் எஸ்யூவி அறிமுகம்: விலை ₹10.50 லட்சத்திலிருந்து தொடக்கம்
விக்டோரிஸ் எஸ்யூவியை அறிமுகம் செய்தது மாருதி சுஸூகி

மாருதி சுஸூகி விக்டோரிஸ் எஸ்யூவி அறிமுகம்: விலை ₹10.50 லட்சத்திலிருந்து தொடக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 15, 2025
07:11 pm

செய்தி முன்னோட்டம்

மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விக்டோரிஸ் எஸ்யூவியை, எக்ஸ்-ஷோரூம் விலை ₹10.50 லட்சத்திலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டாவுக்குப் போட்டியாக வடிவமைக்கப்பட்ட இந்த புதிய மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன. வரும் செப்டம்பர் 22, 2025 முதல் இது விற்பனைக்கு வரும். விக்டோரிஸின் மிக முக்கியமான சிறப்பம்சம் அதன் பாதுகாப்பு ஆகும். குளோபல் என்கேப் மற்றும் பாரத் என்கேப் ஆகிய இரண்டு மோதல் சோதனைகளிலும் இது 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதன் மூலம், மாருதி சுஸூகி நிறுவனத்தின் வரலாற்றிலேயே இதுதான் மிகவும் பாதுகாப்பான வாகனம் என்ற பெருமையைப் பெறுகிறது.

முக்கிய அம்சங்கள்

விக்டோரியாஸின் முக்கிய அம்சங்கள்

இந்த எஸ்யூவி ஸ்மார்ட் ஹைப்ரிட், ஸ்ட்ராங் ஹைப்ரிட், எஸ்-சிஎன்ஜி மற்றும் ஆல் க்ரிப் செலக்ட் போன்ற பல்வேறு என்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. மாருதி சுஸூகியின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி கூறுகையில், விக்டோரிஸிற்கு இதுவரை சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் புத்திசாலித்தனமான தொழில்நுட்பம், அதிநவீன அம்சங்கள், நேர்த்தியான வடிவமைப்பு, மற்றும் முழுமையான பாதுகாப்பு ஆகியவை இதற்கு முக்கியக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார். சிறந்த செயல்திறன் மற்றும் பல உயர்ரக அம்சங்களுடன், இந்த எஸ்யூவி, இளைஞர்களைக் கவரும் ஒரு விருப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனம், மாதாந்திரக் கட்டணம் ₹27,707 இலிருந்து தொடங்கும் நிறுவனத்தின் சந்தா சேவை மூலமாகவும் பெறலாம்.