சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸூகி கார்கள்
செய்தி முன்னோட்டம்
மாருதி சுஸூகியின் நெக்ஸா பிரிவானது இந்த மாதம் மாருதியின் பல்வேறு கார்களுக்கு பல விதமான சலுகைகளை அறிவித்திருக்கிறது. தள்ளுபடி விலை மட்டுமல்லாது பரிமாற்ற சலுகை, கார்ப்பரேட் சலுகை என பல விதமான சலுகைகளுடன் மாருதி கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதிகபட்சமாக மாருதி சுஸூகியின் ஆஃப்ரோடிங் எஸ்யூவியான ஜிம்னியின் விலையில், வேரியன்டை பொருத்து ரூ.2.16 லட்சம் வரையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து இன்கிஸ் மாடலின் மேனுவல் வெர்ஷனுக்கு ரூ.40,000-மும், ஆட்டோமேட்டிக் வெர்ஷனுக்கு ரூ.35,000-மும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தள்ளுபடியுடன் கூடுதலாக ரூ.15,000 பரிமாற்ற சலுகையும், ரூ.5,000 கார்ப்பரேட் சலுகையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாருதி
சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் மாருதி கார்கள்:
மாருதி சுஸூகி பெலினோ மாடலின் பெட்ரோல் வேரியன்டானது ரூ.30,000 தள்ளுபடியுடனும், CNG வேரியன்டானது ரூ.25,000 தள்ளுபடியுடனும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல், சியாஸ் மாடலுக்கு ரூ.25,000 தள்ளுபடி வழங்கப்பட்டிருக்கிறது.
மாருதி சுஸூகி ப்ராங்க்ஸ் மாடலின் பெட்ரோல் மற்றும் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களின் விலையில், ரூ.15,000 தள்ளுபடியும், ரூ.10,000 பரிமாற்ற சலுகையும் வழங்கப்பட்டிருக்கிறது.
கிராண்டு விட்டாரா மாடலின் சில வேரியன்டகளுக்கு மட்டும் ரூ.15,000 தள்ளுபடியுடன், ரூ.15,000 பரிமாற்ற சலுகையை வழங்குகிறது மாருதி சுஸூகி. இது தவிர, பல்வேறு மாடல்களுக்கு ரூ.30,000 மதிப்புடைய ஸ்கிராப்பேஜ் சலுகைகளை வழங்குகிறது அந்நிறுவனம்.