NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / மாருதி சுசுகி எர்டிகா இந்தியாவில் 10 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாருதி சுசுகி எர்டிகா இந்தியாவில் 10 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது
    நாட்டின் மொத்த MPV விற்பனையில் மூன்றில் ஒரு பங்கை இந்த கார் கொண்டுள்ளது

    மாருதி சுசுகி எர்டிகா இந்தியாவில் 10 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 09, 2024
    05:37 pm

    செய்தி முன்னோட்டம்

    மாருதி சுஸுகி, எர்டிகா விற்பனையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

    இந்தியாவில் 10 லட்சம் யூனிட் விற்பனை எண்ணிக்கையை எட்டிய அதிவேக பல்நோக்கு வாகனம்(எம்பிவி) இது என்ற பெருமையை பெற்றுள்ளது.

    பிரபலமான மூன்று வரிசை கொண்ட கார்களில், ரெனால்ட் ட்ரைபர் மற்றும் கியா கேரன்ஸ் போன்றவற்றுடன் போட்டியிடும் எர்டிகா, தற்போது இந்த பிரிவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

    நாட்டின் மொத்த MPV விற்பனையில் மூன்றில் ஒரு பங்கை இந்த கார் கொண்டுள்ளது. சராசரியாக, ஒவ்வொரு மாதமும் 10,000 யூனிட்களுக்கு மேல் MPV விற்பனை செய்யப்படுகிறது.

    2012இல் அறிமுகமானதில் இருந்து, எர்டிகா பல புதுப்பிப்புகளுக்கு உட்பட்டுள்ளது. அதில் சமீபத்திய ஃபேஸ்லிஃப்ட் 2022ம் அடங்கும்.

    மாருதி சுஸுகியின் பயன்பாட்டு வாகன வரிசையில் எர்டிகா முக்கிய பங்கு வகிக்கிறது.

    வாடிக்கையாளர்

    MPV முதல் முறை வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது

    மாருதி சுஸுகியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையின் மூத்த நிர்வாக அதிகாரியான ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், எர்டிகாவின் நவீனத்துவம், எம்பிவிக்கான முதல் முறை வாடிக்கையாளர்களை 41% வரை அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக இளைய நகர்ப்புற வாடிக்கையாளர்களே அதிகம்.

    எர்டிகா வாங்குபவர்களில் 66% பேர் இதை முன்னரே தீர்மானிக்கப்பட்ட தேர்வாகக் கருதுகின்றனர்.

    இது விரும்பத்தக்க குடும்ப வாகனமாக அதன் நிலையை உறுதிப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். எர்டிகா இந்தியா முழுவதும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தைகளில் சமமான பிரபலத்தைப் கொண்டுள்ளது.

    இதன் விலைகள் ரூ. 8.69 லட்சம் மற்றும் ரூ. 13.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), மூன்று தானியங்கி விருப்பங்கள் மற்றும் இரண்டு CNG பதிப்புகள் உட்பட நான்கு டிரிம்கள் மற்றும் 11 பரந்த வகைகளில் கிடைக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாருதி
    கார்
    கார் கலக்ஷன்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    மாருதி

    30 லட்சம் WagonR மாடல் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்த மாருதி! கார்
    4-வீல் டிரைவ் வசதியுடன் மட்டுமே வெளியாகவிருக்கும் மாருதி சுஸூகி ஜிம்னி.. ஏன்? ஆட்டோமொபைல்
    இந்த மாதம் இந்தியாவில் வெளியாகவிருக்கும் கார்கள் என்னென்ன? ஹோண்டா
    தார் vs ஜிம்னி.. என்னென வசதிகள் ஜிம்னியில் இருக்கின்றன? மஹிந்திரா

    கார்

    2024ல் இந்தியாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் புதிய கார்கள் மற்றும் ஃபேஸ்லிப்ட்கள் ஆட்டோமொபைல்
    ரூ.10 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிறந்த பெட்ரோல் கார்கள் ஆட்டோமொபைல்
    அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று எரிபொருள் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் மாருதி சுஸூகி மாருதி
    குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் எலிகன்ஸ் எடிஷன்களை வெளியிட்ட ஸ்கோடா ஸ்கோடா

    கார் கலக்ஷன்

    செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போகிறீர்களா? இதை கவனத்தில் கொள்ளுங்கள் ஆட்டோமொபைல்
    இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர் சொகுசு கார்கள்
    ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில், 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப் 5 கார்கள் கார்
    பிஎம்டபுள்யு ஐ விஷன் டீ: நொடிகளில் நிறத்தை மாற்றும் அதிசய கார் கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025