பிப்ரவரி 2024 செடான் விற்பனையில் முதலிடத்தை பிடித்தது மாருதி சுஸுகி டிசையர்
செடான் விற்பனையில் சரிவு இருந்தபோதிலும், மாருதி சுஸுகியின் டிசையர் பிப்ரவரி 2024இல் அதிகமாக விற்பனையாகி செடான் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், SUVகள் மற்றும் கிராஸ்ஓவர்களை வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்குவதால் செடான் மற்றும் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், கடந்த மாதம், 15,837 யூனிட்கள் விற்பனையான மாருதி சுஸுகியின் டிசையரால், மாருதி சுஸுகியின் பங்குகள் 50.13%உயர்ந்தது. மேலும், கடந்த மாதம், 5,053 யூனிட்கள் விற்பனையான ஹூண்டாய் AURA, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை பிடித்த போதிலும், 2023 பிப்ரவரியை ஒப்பிடும் போது, கடந்த மாதம் ஹூண்டாய் AURAவின் விற்பனை 8.53% சரிந்துள்ளது.
ஹோண்டா அமேஸ் மூன்றாவது இடத்தை பிடித்துளளது
இதில் ஹோண்டா அமேஸ் மூன்றாவது இடத்தை பிடித்துளளது. கடந்த மாதம் மட்டும் 2,774 யூனிட்கள் ஹோண்டா அமேஸ் விற்பனையாகி உள்ளது. மேலும், அதன் பங்குகள் 8.78% உயர்ந்துள்ளன. பிப்ரவரி 2024 இல் 1,680 யூனிட்கள் விற்பனையான ஹூண்டாய் வெர்னா, 3474.47% ஆண்டு வளர்ச்சியுடன் செடான் சந்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஹூண்டாய் வெர்னா 47 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 2024இல் வோக்ஸ்வாகன் விர்டஸா 1,631 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மேலும், அதன் ஆண்டு விற்பனை 4.35% அதிகரித்துள்ளது.