Loading...
மஹிந்திரா SUV கார்களின் விலை மீண்டும் உயர்கிறது? மூலப்பொருள் விலை உயர்வால் நிறுவனம் யோசனை
அனைத்து வகையான SUV கார்களின் விலையையும் உயர்த்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் பரிசீலித்து வருகிறது

மஹிந்திரா SUV கார்களின் விலை மீண்டும் உயர்கிறது? மூலப்பொருள் விலை உயர்வால் நிறுவனம் யோசனை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 27, 2026
06:42 pm

செய்தி முன்னோட்டம்

உதிரிபாகங்கள் மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதை தொடர்ந்து, தனது அனைத்து வகையான எஸ்.யு.வி (SUV) கார்களின் விலையையும் உயர்த்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் பரிசீலித்து வருவதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மூலப் பொருட்களின் விலை நிலவரத்தை கூர்ந்து கவனித்து வருவதாகவும், அடுத்த சில வாரங்களில் விலை உயர்வு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் மஹிந்திரா ஆட்டோமோட்டீவ் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான நளினிகாந்த் கொல்லகுண்டா உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே இந்த ஆண்டில் ஜனவரி, ஏப்ரல் மற்றும் ஜூலை என 3 முறை மஹிந்திரா நிறுவனம் கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதில் கடந்த ஜூலை மாதம் எஸ்.யு.வி கார்களுக்கு 2.7% வரை விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு

பண்டிகை கால விற்பனை எதிர்பார்ப்பு

அடிக்கடி விலை உயர்த்தப்பட்டாலும், வாகனங்களின் விலையானது ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு முந்தைய அளவை விட குறைவாகவே உள்ளதால், வாடிக்கையாளர்களின் கார் முன்பதிவு மற்றும் விசாரணைகளில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று நளினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் கார்களுக்கு சந்தையில் வலுவான வரவேற்பும் அதிக தேவையும் இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விரிவாக்கம்

மின்சார வாகனங்கள் மற்றும் உற்பத்தித் திறன் விரிவாக்கம்

மஹிந்திரா நிறுவனம் தற்போது மின்சார வாகனங்கள் (EV) தயாரிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறது.

இருப்பினும் இந்தியாவில் அரசு விதிமுறைகள் மற்றும் கொள்கைகள் மாறினால், அதற்கு ஏற்ப தங்களது தயாரிப்பு உத்தியை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. * தற்போதைய மாதாந்திர உற்பத்தி, 60,000 எரினியல் என்ஜின் (ICE) வாகனங்கள் மற்றும் 8,000 மின்சார வாகனங்கள்.

எதிர்கால திட்டப்படி (மார்ச்/ஏப்ரல் 2027-க்குள்), மாதாந்திர உற்பத்தித் திறனை ICE வாகனங்களுக்கு 70,000 ஆகவும், EV வாகனங்களுக்கு 12,000 ஆகவும் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT