NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிடும் லெக்சஸ்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிடும் லெக்சஸ்?
    இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிடும் லெக்சஸ்?

    இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிடும் லெக்சஸ்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 03, 2023
    04:27 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய லக்சரி கார் சந்தையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டொயோட்டாவின் துணை நிறுவனமான லெக்சஸ் (Lexus). அந்த இரண்டு கார்களில் முதல் மாடலை 2026ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது லெக்சஸ்.

    LF-ZC மற்றும் LF-ZL ஆகிய கான்செப்ட் கார்களின் மூலம் தங்களுடைய மேம்பட்ட தொழில்நுட்பங்களை சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்று முடந்த ஜப்பான் மொபிலிட்டி நிகழ்வில் காட்சிப்படுத்தியிருந்தது அந்நிறுவனம்.

    அடுத்து அந்நிறுவனம் உருவாக்கவிருக்கும் அத்தனை எலெக்ட்ரிக் மாடல்களுக்கும் அடிப்படையாக இந்த தொழில்நுட்பங்களே அமையவிருக்கின்றன.

    எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் என பல்வேறு பவர்ட்ரெயின் உருவாக்கத்தில் டொயோட்டா முதலீடு செய்து வரும் நிலையில், 2035ம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்யும் சொகுசு கார் நிறுவனமாக மாறத் திட்டமிட்டிருக்கிறது லெக்சஸ்.

    லெக்சஸ்

    இந்தியாவில் லெக்சஸ் கார்களின் விற்பனை: 

    2017ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக லெக்சஸின் சந்தைப் பங்கு உயர்ந்து வருகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் லெக்சஸின் விற்பனை இருமடங்காகி வருவதாக, லெக்சஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் நவீன் சோனி தெரிவித்திருக்கிறார்.

    எனினும், போட்டியாளர்களை எதிர்கொள்ளும் அளவிற்காக விற்பனையை இந்தியாவில் லெக்சஸ் பெறவில்லை என்றே கூறவேண்டும். இன்னும், லெக்சஸின் விற்பனைத் தகவல்களை, டொயோட்டாவின் அறிக்கையுடன் சேர்த்தே வெளியிட்டு வருகிறது லெக்சஸ்.

    தற்போது வரை இந்தியாவில் பல எஸ்யூவிக்கள், செடான்கள் மற்றும் கூப் மாடல்களை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தாலும், அனைத்துமே ஹைபிரிட் மாடல்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2024ம் ஆண்டு அந்நிறுவனம் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடலே, இந்தியாவில் லெக்சஸின் முதல் எலெக்ட்ரிக் காராகும்.

    சொகுசு கார்

    இந்தியாவில் வெளியாகவிருக்கும் லெக்சஸின் எலெக்ட்ரிக் கார்: 

    ஜப்பான் மொபிலிட்டி நிகழ்வில் காட்சிப்படுத்திய LF-ZC கான்செப்டையே, 2026ம் ஆண்டு இந்தியாவில் தங்களுடைய முதல் எலெக்ட்ரிக் காராக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது லெக்சஸ்.

    சுமார் 1000 கிமீ ரேஞ்சைக் கொண்டு வெளியிடப்படவிருக்கும் இந்த மாடலானது, இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் ES 300h செடானுக்கு மாற்றாக, ப்ரீமியம் எலெக்ட்ரிக் செடான் பிரிவில் அறிமுகமாகவிருக்கிறது.

    நிக்கல், மேங்கனீஸ் மற்றும் கோபால்ட் (NMC) செல் பேட்டரியை தங்களுடைய புதிய காரில் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது லெக்சஸ். குறைவான இடத்தில், அதிக ரேஞ்சைக் கொடுக்கக்கூடிய திறனைப் பெற்றிருக்கும் இந்த பேட்டரிக்கள், 20 நிமிடத்திலேயே 80% வரை சார்ஜ் ஆகும் திறனையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலக்ட்ரிக் கார்
    ஆட்டோமொபைல்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    எலக்ட்ரிக் கார்

    ஒரு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்தது டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வாகனங்கள்
    புதிய கான்செப்ட் எலெக்ட்ரிக் தார் (தார்.e) மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா மஹிந்திரா
    எலெக்ட்ரிக் வாகன வெளியீட்டு டைம்லைனை பகிர்ந்து கொண்ட மஹிந்திரா மஹிந்திரா
    இந்தியாவில் ஸ்ட்ராங் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் ரெனோ ஆட்டோமொபைல்

    ஆட்டோமொபைல்

    ரூ.10 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட செடான்கள் செடான்
    'eVX' கான்செப்ட் எலெக்ட்ரிக் காரின் தயாரிப்பு வடிவத்தை சோதனை செய்து வரும் மாருதி? மாருதி
    இந்தியாவில் கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க பரிசீலனை செய்து வரும் மத்திய அரசு டெஸ்லா
    இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் 'டாடா கர்வ்' எஸ்யூவி, என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்

    இந்தியா

    தெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு: நேருக்கு நேர் மோதுகின்றன பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக  தெலுங்கானா
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்புக் குழுவினருக்குத் தலா ரூ.50,000 ஊக்கத் தொகை உத்தரகாண்ட்
    பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்கா
    இந்த வருடத்தின் பிரபலமான டாப் 10 படங்கள்: ஐஎம்டிபி வெளியிட்ட தரவரிசை லியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025