
காரைக் கழுவினால் ரூ.5,000 அபராதம்: கர்நாடக அரசின் புதிய உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தற்போது நிலவும் தண்ணீர் பிரச்சனையை சமாளிப்பதற்காக, குடிநீரில் காரை கழுவினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கார்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல், நீரூற்றுகள், சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு போன்ற பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்துவதை கர்நாடக நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தடை செய்துள்ளது.
பெங்களூரு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களும் தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்காக நடந்த அவசர கூட்டத்தில், மற்ற பணிகளை விட நீர்ப்பாசனம் மற்றும் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கும் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவித்துள்ளார்.
கர்நாடகா
6,000 லிட்டர் தண்ணீர் டேங்கரின் விலை ரூ.600
பெங்களூரு மற்றும் அதன் அண்டை மாவட்டங்கள் தண்ணீர் டேங்கர்களை பெரிதும் நம்பியுள்ளன. அந்த நகரத்தில் சுமார் 3,500 டேங்கர்கள் இயங்குகின்றன.
டேங்கர் உரிமையாளர்கள் அதிக விலை வசூலிப்பதை தடுக்க, கர்நாடக அரசு தண்ணீர் டேங்கர்களுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது.
பெங்களூரு மாவட்ட நிர்வாகத்தின் கூற்றுப்படி, 6,000 லிட்டர் தண்ணீர் டேங்கர் 600 ரூபாய்க்கும்; 8,000 லிட்டர் டேங்கர் 700 ரூபாய்க்கும்; மற்றும் 12,000 லிட்டர் டேங்கர் 1,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இது 5 கிமீக்குள் தண்ணீர் சப்ளை செய்வதற்கான விலைகள் ஆகும்.
5 கிமீ முதல் 10 கிமீ வரை தண்ணீர் சப்ளை செய்ய 6,000 லிட்டர் டேங்கரின் விலை ரூ.750 வரை அதிகரிக்கும்