வென்யூ மற்றும் வென்யூ N மாடல்களில் அடாஸ் தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கிறது ஹூண்டாய்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய வென்யூ மற்றும் வென்யூ N கார்களில் அடாஸ் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைக் (ADAS Technology) கொடுத்து அப்டேட் செய்திருக்கிறது ஹூண்டாய்.
இந்த மாடல்களின் அப்டேட்களுடன், இந்தியாவில் அடாஸ் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஐந்து மாடல்களை தங்களுடைய லைன்அப்பில் விற்பனை செய்யவிருக்கிறது அந்நிறுவனம்.
அடாஸ் தொழில்நுட்பத்தின் கீழ், ஓட்டுநர் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டிற்காக பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
பார்வர்ட்டு கொலிஷன் வார்னிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், பார்வர்டு கொலிஷன் அவாய்டன்ஸ் அசிஸ்ட், லேன் டிப்பர்சூர் வார்னிங், டிரைவர் அட்டென்ஷன் வார்னிங், ஹை பீம் அசிஸ்ட் மற்றும் லேன் ஃபாலேவிங் அசிஸ்ட் ஆகிய வசதிகள் புதிய அடாஸ் தொழில்நுட்பத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.
ஹூண்டாய்
ஹூண்டாய் வென்யூ: புதிய இன்ஜின்
இந்த அடாஸ் தொழில்நுட்பங்களுடன் புதிய இன்ஜின் கொண்ட வென்யூ மாடலையும் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹூண்டாய்.
118.3hp பவர் மற்றும் 172Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 1.0 லிட்டர் டர்போ GDi பெட்ரோல் இன்ஜினை வென்யூவில் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸூடன் வழங்கப்பட்டிருக்கும் மேற்கூறிய இன்ஜினை, வென்யூவின் S(O) மற்றும் SX(O) ஆகிய ட்ரிம்களிலும், வென்யூ Nன் N6 மற்றும் N8 ஆகிய ட்ரிம்களிலும் வழங்குகிறது ஹூண்டாய்.
முன்னதாக இந்தியாவில் விற்பனை செய்து வந்த மாடல்களில், அயானிக் 5, டூஸான் மற்றும் வெர்னா ஆகிய மாடல்களில் அடாஸ் தொழில்நுட்ப வசதிகளை ஹூண்டாய் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.