
இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டிய ஹூண்டாயின் அயானிக் 5 எலெக்ட்ரிக் கார்
செய்தி முன்னோட்டம்
இந்திய எலெக்ட்ரிக் கார் விற்பனைச் சந்தையில், ஹூண்டாயின் எலெக்ட்ரிக் காரான அயானிக் 5 (IONIQ 5), புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த மாதம் இந்தியாவில் அயானிக் 5 மாடலை வெளியிடவும் செய்தது ஹூண்டாய்.
இந்த 11 மாதங்களில் மொத்தமாக 1,000 அயானிக் 5 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது ஹூண்டாய்.
தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்திற்கு, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் கோனா எலெக்ட்ரிக் மாடலுக்குப் பிறகு இந்த அயானிக் 5 இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலாகும்.
ஹூண்டாய்
இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் கோலோச்சும் டாடா:
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் 75% பங்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறது டாடா. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களையும் டாடாவின் டியாகோ, நெக்ஸான் மற்றும் டிகோர் ஆகிய மாடல்களே பிடித்திருக்கின்றன.
எனினும், இவை அனைத்துமே ரூ.20 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலைக்குள் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்கின்றன.
ஹூண்டாயின் அயானிக் 5 எலெக்ட்ரிக் காரின் அடிப்படை மாடலானது இந்தியாவில் ரூ.45.95 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவகிறது. இந்தியா எலெக்ட்ரிக் கார் விற்பனை சந்தையில் 1.7% சந்தைப் பங்குகளுடன் நான்காம் இடத்தில் ஹூண்டாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.